தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சுக்கிரன் - சனி இடம் மாற்றம்.. நான்கு ராசிகளுக்கு எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் தேடி வரும்!

சுக்கிரன் - சனி இடம் மாற்றம்.. நான்கு ராசிகளுக்கு எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் தேடி வரும்!

Divya Sekar HT Tamil
Nov 13, 2023 11:00 AM IST

சுக்கிரன் மற்றும் சனி பகவான் இடம் மாற்றமானது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.இதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருந்தாலும் சில ராசிகள் அதிர்ஷ்டம் பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.

சுக்கிரன் - சனி இடம் மாற்றம்
சுக்கிரன் - சனி இடம் மாற்றம்

சுக்கிர பகவான் செல்வம், ஆடம்பரம், மகிழ்ச்சி, பணம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகிறார். அதே நிலையில் சனிபகவான் உண்மை, உழைப்பு, நியாயம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகிறார்.

இந்த இரண்டு கிரகங்களும் தற்போது தங்களது நிலையை மாற்றி பயணம் செய்து வருகின்றனர். இதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருந்தாலும் சில ராசிகள் அதிர்ஷ்டம் பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

சனி மற்றும் சுக்கிர பகவானால் உங்களுக்கு ராஜயோகம் கிடைக்கப் போகின்றது. எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். பண வரவில் எந்த குறையும். இருக்காது வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும் புதிய வேலைவாய்ப்புகள் உங்களுக்கு அமையும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

ரிஷப ராசி

சனி மற்றும் சுக்கிரணால் உங்களுக்கு பண வரவு கிடைக்கப் போகின்றது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.

மகர ராசி

பணவரவில் இருந்த குறையும் இருக்காது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும் வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகள் லாபத்தை பெற்று தரும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும்.

மிதுன ராசி

சனி மற்றும் சுக்கிர பகவானால் ராஜயோகம் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. குடும்பத்தினர் இடையே மகிழ்ச்சிகள் உண்டாகும். பணவரவில் இந்த சிக்கல்களும் இருக்காது. புதிய முதலீடுகள் லாபத்தை கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். திடீரென்று அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்