Friday Temple: கோயில் நகரம் கும்பகோணம்.. தென்னாட்டு காளஹஸ்தி.. ராகு தோஷ தலம்..8 கை துர்க்கை
Friday Temple: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருள்மிகு காளகஸ்தீஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் காளஹஸ்தீஸ்வரர் எனவும் தாயார் ஞானப்பிரகலாம்பிகை எனவும் திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றன.

Friday Temple: உலகம் முழுவதும் சிவபெருமானுக்கு மிகப்பெரிய பக்தர்கள் கூட்டம் இருந்து வருகிறது. அன்று முதல் இன்று வரை சிவபெருமானுக்கு பக்தர்கள் கூட்டம் குறைந்தபாடு கிடையாது. அந்த காலம் தொடங்கி இன்றுவரை சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. உலகம் எங்கும் கோயில்கள் இருந்தாலும் குறிப்பாக இந்தியாவில் சிவபெருமானுக்கு திரும்பும் திசை எல்லாம் கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இது போன்ற போட்டோக்கள்
Mar 22, 2025 09:58 AMசூரிய கிரகணம் 2025: இந்த ராசிகள் வாழ்க்கை எப்படி மாறும்?.. சனி சூரிய கிரகணத்தன்று மாறுகிறார்.. என்ன நடக்கப்போகுதோ?
Mar 22, 2025 09:44 AMமே மாதம் கேது பெயர்ச்சி.. வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்போகும் ராசிகள்.. நீங்க என்ன ராசி?
Mar 22, 2025 07:54 AMபிறவியிலேயே லட்சுமி தேவியின் அருள் பெற்ற 5 ராசிகள் இதோ.. செல்வம், புகழ் குவியும் அந்த ராசிக்காரரா நீங்கள்!
Mar 22, 2025 07:00 AMGuru Transit 2025: குரு பெயர்ச்சி 2025 இல் ஜாக்பாட்.. இந்த ராசிகள் தலையெழுத்து மாறப்போக்து.. மே மாதம் குறி..!
Mar 22, 2025 05:00 AMஇன்றைய ராசிபலன் : கவலை வேண்டாம்.. கனவு நனவாகும் அதிர்ஷ்டம் யாருக்கு..இன்று உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Mar 21, 2025 03:06 PMஇந்த 4 ராசிகளுக்கு துணையின் மீது நம்பிக்கை குறைவாக இருக்குமாம்.. உங்க ராசி இதில் இருக்கா பாருங்க!
குறிப்பாக தமிழ்நாட்டில் சிவபெருமானின் குலதெய்வமாக வணங்கி வந்துள்ளனர். காலம் தொடங்கி இன்று வரை சிவபெருமானை குலதெய்வமாக அனைத்து மக்களும் வணங்கி வருகின்றனர். மண்ணுக்காக ஒருபுறம் மன்னர்கள் போரிட்டு வந்தாலும் தங்களது கலைநயத்தையும் பக்தியையும் வெளிப்படுத்துவதற்காகவே மிக பிரம்மாண்டமான கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர்.
மன்னர்கள் இன்றுவரை காலத்தால் அழிக்க முடியாத சரித்திர குறியீடாக அந்த கோயில்கள் இயற்கை சீற்றங்களை தாண்டி மிகவும் கம்பீரமாக நின்று வருகின்றன. அனைத்து கோயில்களிலும் நாயகனாக சிவபெருமான் லிங்க வடிவில் காட்சி கொடுத்து மக்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருள்மிகு காளகஸ்தீஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் காளஹஸ்தீஸ்வரர் எனவும் தாயார் ஞானப்பிரகலாம்பிகை எனவும் திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றன.
தல சிறப்பு
இந்த திருக்கோயிலில் மகர சங்கராந்தி தினத்தன்று சிவபெருமானுக்கு திருக்கல்யாண வைபவம் நடத்தப்படுகிறது. திருப்பதி கோயிலுக்கு அருகே இருக்கக்கூடிய காளஹஸ்தி திருக்கோயிலை போல இந்த திருக்கோயில் தென் காளஹஸ்தி என அழைக்கப்படுகிறது.
காஞ்சி மகா பெரியவர் தினமும் இந்த கோயிலுக்கு வந்து தரிசனம் செய்து சென்றுள்ளார். இந்த திருக்கோயில் ஓம்கார வடிவில் அமைந்திருக்கும். நவகிரக சன்னதிகளில் ராகு மட்டும் இருக்க மாட்டார். ஏனென்றால் இந்த திருக்கோயிலில் ராகு பகவானுக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த திருக்கோயிலில் துர்க்கை அம்மன் 18 கைகள் கொண்டு காட்சி கொடுத்து வருகிறார். பிரம்மாண்ட தனி சன்னதி துர்க்கை அம்மனுக்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த திருக்கோயிலில் அஷ்ட தச பூஜை மகாலட்சுமி துர்க்கைக்கு நடத்தப்படுகிறது அது மிகவும் விசேஷமாகும்.
தல புராணம்
வாயு பகவான் ஆதிசேஷன் இருவருக்கும் இடையில் யார் பெரியவர் என்று போட்டி ஏற்பட்டது. மேல்மலையை இறுக்கமாக ஆதிசேஷன் பிடித்துக் கொண்டார். வாயு பகவான் தனது காட்சி நாள் அதனை அசைக்க முயற்சி செய்தார். இருவருக்கும் இப்படியே போட்டி நடந்தது. இந்த போட்டியில் மேருமலையிலிருந்து மூன்று சிகரங்கள் உடைந்து பறந்து விழுந்தன.
அவை தென்பகுதியில் வந்து விழுந்தது. அந்த மூன்று மலையும் திரிகோணமலை, திருச்சி மலை, காளத்தி மலை என அழைக்கப்படுகின்றன. சிவபெருமான் இங்கு காலஹஸ்தீஸ்வரராக எழுந்தருளினார். கோயில் நகரமாக விளங்கக்கூடிய கும்பகோணத்தில் சிவபெருமான் காட்சி கொடுத்தார். இது ராக தோஷத்தில் தீர்த்து வைக்கும் தளமாக விளங்கி வருகின்றது. காஞ்சி சங்கராச்சாரியார் சுவாமிகள் மற்றும் தஞ்சை சரபோஜி மன்னர் சேர்ந்து இந்த கோயிலை அமைத்தனர். இந்த திருக்கோயில் வழிபட்டால் காளகஸ்தியில் நேரடியாக வழிபட்ட பலன்கள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆக இருந்து வருகிறது.
