தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Curses And Remedies: தலைமுறை தலைமுறையாய் நம்மை துரத்தும் சில சாபங்களும் பரிகாரங்களும்!

Curses and Remedies: தலைமுறை தலைமுறையாய் நம்மை துரத்தும் சில சாபங்களும் பரிகாரங்களும்!

Pandeeswari Gurusamy HT Tamil
Sep 26, 2023 12:50 PM IST

கன்றோடு இருக்கும் பசுவைப் பிரிப்பது பசுவை உணவிற்காக அலைய விடுவதும், பசுவிற்கு தண்ணீர் கொடுப்பதில் அலட்சியம், போன்றவை கோ சாபத்திற்கு வழிவகுக்கும்.

குல தெய்வ சாபம்
குல தெய்வ சாபம்

கோ சாபம்

பசுக்களை தேவை இல்லாமல் அடித்தல், துன்புறுத்துதல், வதை செய்தல் , பசுவை உணவாக எடுத்துக் கொள்ளுதல், பால் கறப்பு நின்ற பசுக்களை அடி மாடுகளாக விடுதல் , இது போன்ற பசிவிற்கு செய்யப்படும் தொல்லைகள் கோ சாபத்திற்கு வழி வகுக்கும். கன்றோடு இருக்கும் பசுவைப் பிரிப்பது பசுவை உணவிற்காக அலைய விடுவதும், பசுவிற்கு தண்ணீர் கொடுப்பதில் அலட்சியம், போன்றவை கோ சாபத்திற்கு வழிவகுக்கும். இந்த சாபத்தால் ஒரு வம்சத்தின் வளர்ச்சியே இல்லாமல் போய்விடும்.

பரிகாரங்கள்

பசுவிற்கு நல்ல நாட்களில் ஒரு கட்டு கீரை, பழங்கள் ஆகியவற்றை கொடுக்க வேண்டும் கன்றோடு இருக்கக்கூடிய பசுவிற்கு கோ பூஜை செய்யலாம். மேலும் குலதெய்வ வழிபாடு, கோபாலகிருஷ்ணர் வழிபாடு, நந்தி வழிபாடு, காமதேனு வழிபாடு போன்ற வழிபாடுகள் இந்த கோ சாதத்தில் இருந்து நமக்கு விமோசனம் கிடைக்க உதவும்.

பூமி சாபம்

சிலர் அதிகமான கோபத்தால் தேவையில்லாமல் கால்களை பூமியில் மீண்டும் மீண்டும் அடிப்பார்கள். இதுபோன்ற செயல்களால் பூமி சாபம் ஏற்படும். பூமியில் தேவையில்லாத பள்ளங்களை ஏற்படுத்துவது, பூமியில் தேவையில்லாத பொருட்களை கொட்டுதல், அடுத்தவர் நிலத்தை ஆக்கிரமிப்பது இது போன்ற காரியங்களால் ஏற்படுவது பூமி சாபம், எனப்படுகிறது. இந்த சாபத்தால் மனிதன் தான் வாழும் காலத்திலேயே நரக வேதனையை அனுபவிக்க நேரிடும்.

பரிகாரம்

குலதெய்வத்தை மனதார வணங்க வேண்டும். பூதேவி வழிபாடு செய்தல் வேண்டும். கோயில் கட்டுதல், பள்ளிக்கூடம் கட்டுதல் போன்ற நல்ல காரியங்களுக்கு நிலத்தை தானமாக வழங்கலாம். நிலத்தை தானமாக வழங்க இயலாதவர்கள் கட்டுவதற்கு தேவையான மூலப்பொருட்களை தங்களால் இயன்ற அளவு வழங்கலாம்.

கங்கா சாபம்

நதியை தடுத்து நிறுத்துதல், நீரை மாசுபடுத்துதல் ஆறு, வாய்க்கால் போன்றவற்றை வடிகால்களை மாற்றுதல் போன்றவற்றால் கங்கா சாபம் ஏற்படும். இதனால் குடிப்பதற்கு தண்ணீர் அற்ற நிலை ஏற்படும்.

பரிகாரம்

நீரை மதித்து சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். கங்கையை தன் தலைமேல் தாங்கி இருக்கக்கூடிய சிவபெருமானை வழிபடலாம். பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பரந்தாமனை வழிபடலாம். நீர்மோர் தானம் தண்ணீர் பந்தல் அமைப்பது போன்ற அறச்செயல்களில் ஈடுபடலாம்.

விருட்ச சாபம்

மரங்களுக்கு நாம் தேவை இல்லாமல் இடையூறு செய்தல் போன்ற காரணங்களால் விருட்ச சாபம் ஏற்படுகிறது. பசுமையான மரத்தை வெட்டுவது, காட்டை அழிப்பது, பூத்து காய்த்து குலுங்கும் மரங்களை தேவையில்லாமல் வெட்டுவது போன்ற காரியங்களால் விருட்ச சாபம் ஏற்படுகிறது. இந்த விருட்ச சாபம் கடனை அதிகரிக்கும். நமக்கு நோயை ஏற்படுத்தும்.

பரிகாரம்

மரங்களை தன் வாழ்நாளில் முடிந்த அளவிற்கு நட்டு பராமரிக்க வேண்டும். தல விருச்சங்களை 108 முறை சுற்றி வரலாம். இதோடு குலதெய்வ வழிபாட்டையும் கடைபிடிக்க வேண்டும்.

தேவ சாபம்

தெய்வங்களை நிந்தனை செய்வது, தேவ சாபத்தை உண்டாக்கும். பூஜையின் போது இடையில் எழுந்து வருவது, தெய்வத்தை இகழ்ந்து பேசுவது இது போன்ற காரணங்களால் தேவ சாபம் ஏற்படும். நம் வாழ்வில் எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் தெய்வ நிந்தனை செய்வதை தவிர்க்க வேண்டும். தெய்வ சாபம் ஏற்பட்டால் வாழும் காலத்திலும், கடைசி காலத்திலும் உற்றார் உறவு நட்பு சுற்றம் என யாரும் அற்று தனித்து வாழக்கூடிய சூழலை ஏற்படுத்தும். 

பரிகாரங்கள்

குலதெய்வ வழிபாடு மற்றும் குடும்ப சகிதமாக உள்ள தெய்வங்களை வழிபட வேண்டும். உறவுகளுக்குள் வாழ்வில் கஷ்டப்படுபவர்களுக்கு உதவி செய்தோமேயானால் இந்த தேவ சாபம் நம்மை விட்டு நீங்கும்.

ரிஷி சாபம்

மகான்களையும் ஞானிகளையும் நிந்தித்து பேசுதல், தீட்சை பெற்ற ஆச்சாரியார்களை இகழ்ந்து பேசுதல் அவமானப்படுத்துதல், போன்ற காரியங்களால் ஏற்படுவது ரிஷி சாபம் ஆகும். அதே சமயம் உண்மையான பக்தர்களை அவமதிப்பு செய்வதாலும் இந்த ரிஷிதாபம் ஏற்படும்.

இந்த ரிஷி சாபத்தால் குலநாசம் ஏற்படும்.

பரிகாரம்

உண்மையான பக்தர்களுக்கு தொண்டாற்ற வேண்டும். பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு மோர் பந்தல், தண்ணீர் பந்தல் கோயில்களில் அன்னதானம் செய்வது போன்ற பரிகாரங்களை செய்யலாம். மேலும் குலதெய்வ வழிபாடு மற்றும் சித்தர் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

முனி சாபம்

தேவ சாபம் தெய்வதிலேயே சிறு தெய்வங்களையும் அந்த வழிபாட்டை அவமதிப்பது இந்த முனி சாபத்தை ஏற்படுத்தும். பொதுவாக எல்லை தெய்வங்களை இகழ்வது முனி சாபத்தை உக்கிரப் படுத்தும். இந்த சாபங்களால் யாரேனும் நமக்கு பில்லி, சூனியம் ஏவல் வைத்தால் அது அப்படியே பழித்து விடும்.

பரிகாரம்

எந்த தெய்வத்தை நிந்தித்தோமோ அதே தெய்வத்தை மனமுருகி வழிபட வேண்டும். பயணம் செல்லும் போது அந்தந்த ஊரின் எல்லை தெய்வங்களை வழிபட வேண்டும்.

குலதெய்வ சாபம்

குல தெய்வத்தை வணங்காமல் இருத்தல் அல்லது குல தெய்வத்தை நிந்திப்பது போன்ற காரணங்களால் குலதெய்வ சாபம் ஏற்படும். எந்த தெய்வமானாலும் குலதெய்வ வழிபாட்டுக்கு அடுத்ததாகதான் மற்ற தெய்வ வழிபாடுகள். இந்த குல தெய்வ சாபத்தால் குடும்பத்தில் வளர்ச்சி இருக்காது. குடும்பத்தில் சந்தோஷம் நிம்மதி முற்றிலும் இல்லாமல் எது எடுத்தாலும் பிரச்சனை எடுத்த காரியங்கள் அனைத்தும் தோல்வி , அடுத்தடுத்த தோல்விகளை சந்திக்க நேரிடும். எந்த தெய்வத்தை வணங்கினாலும் அதனால் பலன் கிடைக்காது 

பரிகாரம்

குல தெய்வத்தை கண்டிப்பாக வழிபட வேண்டும். குலதெய்வ வழிபாட்டு முறைகளை சரியாக முறையாக கடைபிடிக்க வேண்டும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்