தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sani Bhagavan Luck: தாமத திருமணம்.. மாமியாருடன் சண்டை; உடலில் ரண வேதனை! - 7 ம் இட சனி கொடுக்கும் தொல்லைகள் என்னென்ன?

Sani Bhagavan Luck: தாமத திருமணம்.. மாமியாருடன் சண்டை; உடலில் ரண வேதனை! - 7 ம் இட சனி கொடுக்கும் தொல்லைகள் என்னென்ன?

Kalyani Pandiyan S HT Tamil
Apr 16, 2024 07:41 PM IST

சனிபகவான் மந்தத்தன்மை, மெதுவாக செயல்படுதல் உள்ளிட்டவற்றை குறிக்கும். ஏழாமிடத்தில் சனி பகவான் இருக்கும் பட்சத்தில், திருமணம் ஆன பின்பு அவர்கள் வயதான தோற்றத்தில் காட்சியளிக்க வாய்ப்பு இருக்கிறது.

சனி பகவான்!
சனி பகவான்!

இது குறித்து அவர் பேசும் போது, “ ஏழாம் இடம் என்பது இரண்டாவது குழந்தை, திருமண வாழ்க்கை, வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்குச் சென்று ஜீவனம் செய்வது, உங்களது சம்மந்தி, பிசினஸ் பார்ட்னர், பொதுச் சேவை, உங்களது வாடிக்கையாளர் உள்ளிட்டவற்றை குறிக்கும். இந்த இடத்திற்கு சென்று சனிபகவான் அமரும் பொழுது, என்னவிதமான நிகழ்வுகள் நடக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

சனிபகவான் மந்தத்தன்மை, மெதுவாக செயல்படுதல் உள்ளிட்டவற்றை குறிக்கும். ஏழாமிடத்தில் சனி பகவான் இருக்கும் பட்சத்தில், திருமணம் ஆன பின்பு அவர்கள் வயதான தோற்றத்தில் காட்சியளிக்க வாய்ப்பு இருக்கிறது. அப்படி இல்லை என்றால், அவர்களது வயதை குறைத்து பொதுவெளியில் காண்பிக்க, நிறைய மேக்கப் சார்ந்த பொருட்களை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

சனி பகவான் என்றாலே தூர தேசம். அதை வைத்து பார்க்கும் பொழுது, உங்களது கணவனோ அல்லது மனைவியோ தூர தேசத்தில் இருந்து வருவார்கள்.

7ம் இடத்தில் சனிபகவான் இருக்கும் பட்சத்தில், வெளிநாட்டு வரனை நீங்கள் தாராளமாக எடுத்து நடத்தலாம். 

ஏழாம் இடத்தில் சனி பகவான் இருந்தால், அது ஆணாக இருக்கும் பட்சத்தில், 27 -வயதிலோ அல்லது 29 - வயதிலோ திருமணம் செய்யலாம். பெண்ணாக இருக்கும் பட்சத்தில் 24 அல்லது 25 வயதில் திருமணம் நடத்திக் கொள்ளுங்கள்.

ஏழாம் இடத்தில் சனிபகவான் இருக்கும் பொழுது உங்களது கணவரோ அல்லது மனைவியோ மிகவும் வைராக்கியம் கொண்டவர்களாக இருப்பார்கள். நேர்மை தர்மம் என வாழ்வார்கள். ஏழாம் இடத்தில் சனி பகவான் அமரும் பட்சத்தில், இரண்டாவது குழந்தை உங்களுக்கு தாமதமாக கிடைக்கலாம்.

ஏழாம் இடத்தில் சனி பகவான் இருக்கும் பொழுது, குலதெய்வத்தின் மீது தீராத பற்று இருக்கும். பொது சேவையின் மீது அதீத ஆர்வம் இருக்கும்; உதவி செய்யும் குணமானது அதிகமாக இருக்கும்.

ஏழாம் இடத்தில் சனி பகவான் அமரும் பொழுது  உங்களுடைய சம்பந்திக்கும், உங்களுக்கும் பெரிய பிணைப்பு இருக்காது. சனிபகவான் அலைச்சலை அதிகமாக கொடுப்பார். உடல் வலியை அதிகமாக ஏற்படுத்துவார்.” என்று பேசினார். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும். இந்த தகவல்களுக்கும் ஹிந்துஸ்தான் தமிழ் இணையதளத்திற்கும் சம்பந்தம் கிடையாது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

WhatsApp channel

டாபிக்ஸ்