தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Rahu Ketu Peyarchi: குழந்தை பாக்கியம் கிடைக்குமா? பிசினஸ் எப்படி இருக்கும்? -ரிஷப ராசிக்கான ராகு கேது பெயர்ச்சி பலன்கள்!

Rahu Ketu Peyarchi: குழந்தை பாக்கியம் கிடைக்குமா? பிசினஸ் எப்படி இருக்கும்? -ரிஷப ராசிக்கான ராகு கேது பெயர்ச்சி பலன்கள்!

Kalyani Pandiyan S HT Tamil
Jul 29, 2023 10:31 AM IST

ரிஷப ராசிக்கான ராகு கேது பெயர்ச்சி பலன்கள் இங்கே!

Rahu ketu peyarchi palangal 2023 for rishaba rasi in tamil explain by astrologer ramji swamigal
Rahu ketu peyarchi palangal 2023 for rishaba rasi in tamil explain by astrologer ramji swamigal

இந்த பெயர்ச்சியானது 2025ம் ஆண்டு வரை நடக்கும். இந்த நிலையில் ரிஷப ராசிக்கு இந்தக்காலக்கட்டங்களில் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

ரிஷப ராசியில் 11ம் இடத்திற்கு ராகு இடம்பெயர்கிறார். அதனால் லாபம் என்பது மிகநன்றாக இருக்கும். ஐந்தாம் வீட்டில் கேது இருக்கிறார். ஆகையால் உங்களுக்கு ஞானம் அதிகமாகும். இன்னொரு விஷயம் நீங்கள் இங்கு நீண்ட நாட்களாக செல்ல வேண்டும் என்று யோசித்து வைத்திருந்த பக்தி ஸ்தலங்களுக்கு எல்லாம் செல்வீர்கள். மாலை போட்டு வழிபாடு நடத்த வேண்டும் என்று எண்ணியதெல்லாம் நடக்கும்.

ஐந்தில் கேது வருவதால் செயற்கை கருத்தரிப்பிற்கு நீண்ட நாட்களாக திட்டமிட்டு இருந்தவர்கள் இந்த நேரத்தில் செய்யுங்கள். கண்டிப்பாக ஒர்க்அவுட் ஆகும். காரணம் ஐந்து என்பது புத்திர ஸ்தானம். பதினொன்றாம் இடத்தில் ராகு வருவதால், மாமனார் சம்பந்தமான விஷயங்களில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். புதிய நண்பர்களின் அறிமுகம் உங்களுக்கு கிடைக்கும். ரிஷப ராசிக்கு அடுத்த ஒன்றரை வருடமும் நல்ல வருடமாக இருக்கும். குறிப்பாக வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைக்கும். பிசினஸ் மிகவும் தோய்வாக சென்று கொண்டிருந்தவர்களுக்கு பிசினஸ் நன்றாக ஒரு செல்லும்

தகவல் உதவி: பிஹைண்ட் வுட்ஸ்!

WhatsApp channel

டாபிக்ஸ்