தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Pillaiyarpatti: பிள்ளையார்பட்டியில் இன்று விநாயகர் சதுர்த்தி இல்லை.. என்ன காரணம் தெரியுமா?

Pillaiyarpatti: பிள்ளையார்பட்டியில் இன்று விநாயகர் சதுர்த்தி இல்லை.. என்ன காரணம் தெரியுமா?

Karthikeyan S HT Tamil
Sep 18, 2023 12:33 PM IST

Vinayagar Chaturthi 2023: உலக பிரசித்திபெற்ற பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி அதிகாலையில் ஆலயத்தில் குவிந்துள்ள பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி அதிகாலையில் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள்.
பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி அதிகாலையில் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள்.

அந்த வகையில், இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி இன்று (செப்.18) உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பல்வேறு விநாயகர் ஆலயங்களில் சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.

இதேபோல், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உலகப் பிரசித்திபெற்ற பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தரிசனத்திற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் அதிகாலையிலிருந்து நீண்ட வரிசையில் நின்று விநாயகரை தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த ஆண்டு 10 நாட்கள் நடைபெறும் சதுர்த்தி விழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. தினசரி பகல் மற்றும் இரவில் உற்சவர் ஸ்ரீ கற்பக விநாயகர் திருநாள் மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். இன்று மாலை 4.30 மணிக்கு ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் சந்தனகாப்பு அலங்காரத்தில் மூலவர் காட்சி அளிப்பார்.

தொடர்ந்து மாலை தோரேட்டம் நடைபெற உள்ளது. இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டாலும் பிள்ளையார்பட்டியில் பஞ்சாங்க முறையில் நாளை சதுர்த்தி விழா நடைபெற உள்ளது. 19-ம் தேதி (நாளை)விநாயகர் சதுர்த்தி தினத்தன்று தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது.  அன்றைய தினம் பகலில் மூலவருக்கு மோதகம் படையல் நிகழ்ச்சியும், இரவு 11 மணிக்கு பஞ்சமூர்த்தி சுவாமிகள் புறப்பாடும் நடக்கிறது. மேலும், முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி, முக்குருணி கொழுக்கட்டை படையல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இத்துடன் சதுர்த்தி விழா நிறைவு பெறுவதாக பிள்ளையார்பட்டி கோயில் தலைமை குரு தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்