தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Mars Transit To Virgo: கன்னியில் செவ்வாய் சஞ்சாரம்! இனி வெற்றிதான் - நன்மை பெற போகும் நான்கு ராசிகள்

Mars Transit to Virgo: கன்னியில் செவ்வாய் சஞ்சாரம்! இனி வெற்றிதான் - நன்மை பெற போகும் நான்கு ராசிகள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 21, 2023 11:57 AM IST

கன்னியில் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் அக்டோபர் 3, 2023 வரை நான்கு ராசிகளுக்கு மங்களகரமான நிகழ்வுகள் நடைபெறும்.

கன்னி ராசியில் செவ்வாய் சஞ்சாரிப்பதால் நன்மை பெற போகும் நான்கு ராசிகள்
கன்னி ராசியில் செவ்வாய் சஞ்சாரிப்பதால் நன்மை பெற போகும் நான்கு ராசிகள்

செவ்வாய் பெயர்ச்சி பல ராசிகளின் வாழ்க்கையை மாற்றுகிறது. செவ்வாய் ஆகஸ்ட் 18-ம் தேதி கன்னி ராசியில் பிரவேசித்து அக்டோபர் 3-ம் தேதி வரை இந்த ராசியில் இருக்கிறார்.

வேத ஜோதிடத்தின்படி, செவ்வாய் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுகிறது. ஆகஸ்ட் 18இல் செவ்வாய் தற்போது இருந்து வரும் ராசியை கடந்து கன்னி ராசிக்குள் நுழைகிறது.  அக்டோபர் 3ம் தேதி வரை செவ்வாய் இந்த ராசியில் இருப்பார். 

கன்னி ராசிக்கு 6ம் வீட்டுக்கு அதிபதி செவ்வாய். கன்னி ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பது பல ராசிக்காரர்களின் வாழ்வில் நேர்மறையை தரும். தொழில், வேலையில் வெற்றி, பண ஆதாயம், பெறும் ராசிகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்

கன்னி ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பது மேஷ ராசியினருக்கு நல்ல பலன்களைத் தரும். இந்த காலகட்டத்தில் உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன்கள் கிடைக்கும். நிதி நிலை மேம்படும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். ஆனால் இந்த காலகட்டத்தில் நீங்கள் உங்கள் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். இல்லையெனில், எந்த சூழ்நிலையும் மோசமாகிவிடும்.

மிதுனம்

மிதுன ராசியினருக்கு செவ்வாய் கிரகத்தின் சஞ்சாரம் நன்மை தரும். இந்த நேரத்தில் நேர்மறையான முடிவுகளை எடுப்பார்கள். தொழில் செய்வோர் விரிவாக்க பணிகளில் ஈடுபடுவார்கள். அதற்கான வாய்ப்புகளும் கைகூடி வரும்

பணி ரீதியாக புதிய பொறுப்புகள் கிடைக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உரிய நேரத்தில் பணம் கிடைக்கும்.

கன்னி

செவ்வாய் கன்னியில் நுழைவதால் உடல்நிலை முற்றிலும் மேம்படும். நிலுவையில் உள்ள அனைத்து பணிகளும் முடிப்பீர்ரகள். அலுவலகத்தில் பாராட்டும், அங்கீகாரமும் கிடைக்கும். வருமானம் உயரும் வாய்ப்புகள் உண்டு.

விருச்சிகம்

விருச்சிக ராசியினருக்கு செவ்வாய் சஞ்சாரம் மிகவும் சாதகமாகும். இந்த நேரத்தில் உங்கள் தந்தையின் ஆதரவை பெறுவீர்கள். உறவுகள் வலுவடையும். திருமண பெண்களுக்கு கணவரின் முழு ஆதரவு கிடைக்கும். நிதி நிலை மேம்பட்டு கடன்களில் இருந்து விடுபடலாம்.

தனுசு

தனுசு ராசியினருக்கு செவ்வாய் பெயர்ச்சி மிகவும் நன்மை பயக்கும். செவ்வாய் பெயர்ச்சி காலத்தில் எல்லா பக்கங்களிலிருந்தும் வெற்றியை அடைவீர்கள். 

தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத நிதி ஆதாயம், பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்