தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Marriage Rasi Porutham: திருமணத்திற்காக காத்திருப்பவரா நீங்கள்.. கவனம் இந்த ராசிக்காரர்களுடன் மட்டும் வேண்டாம்!

Marriage Rasi Porutham: திருமணத்திற்காக காத்திருப்பவரா நீங்கள்.. கவனம் இந்த ராசிக்காரர்களுடன் மட்டும் வேண்டாம்!

Pandeeswari Gurusamy HT Tamil
Sep 27, 2023 10:54 AM IST

சில ராசிகளுடன் சில ராசிகள் இணைந்தால் பிரச்சனைதான். வாழ்நாள் முழுவதும் சண்டை சச்சரவுகள் ஏற்படும். அதனால் இப்போதே எந்த ராசியுடன் எந்த ராசி இணைய கூடாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

திருமண பொருத்தம்
திருமண பொருத்தம்

இணையக் கூடாத ராசிகள்

1.சிம்மம்- கன்னி

காலசக்கரத்தின் 5 ஆம் வீடான சிம்ம ராசியும் 6ம் வீடான கன்னி ராசியும் திருமண பந்தத்தில் இணைய கூடாது. அப்படி இணைந்தால் அவர்களின் வாழ்க்கை ஆரம்பத்தில் நன்றாக சென்றாலும் சிம்ம ராசி ஆதிக்கம் அதிகமாகி பிரச்சனைகள் ஏற்படும். இதனால் திருமணம் ஆகியும் பிரிந்து வாழும் சூழல் ஏற்படும்.

2. மீனம் - சிம்மம்

காலசக்கரத்தின் 12 ஆம் வீடான மீன ராசியும், காலச்சக்கரங்களின் 5ம் வீடான சிம்ம ராசியும் இணைய கூடாது. சிம்ம ராசியில் இருந்து மீனம் 8 ஆம்வீடாக வருவதால் எப்போது வாழ்க்கையில் கஷ்டமான சூழல் ஏற்படும். இவர்கள் இணைந்து திருமணம் செய்தால் திருமண வாழ்வில் ஆரம்ப நாட்கள் சந்தோசமாக இருந்தாலும் பின்னர் பிரச்சனை ஏற்பட்டு பிரிவு ஏற்படும்.

3.மேஷம் -விருச்சிகம்

காலச்சக்கரத்தில் முதல் வீடான மேஷ ராசியும் 8ம் வீடான விருச்சிக ராசியும் திருமணத்தில் இணைய கூடாது. அப்படி இணைந்தால் தம்பதியினர் இடையே புரியும் நிலை ஏற்படாது. இவர்களிடம் விட்டு கொடுக்கும் மனப்பான்மை இருக்காது. இதனால் வாழ்க்கை முழுவதும் போராட்டமான நிலையே தொடரும்.

4.ரிஷபம் - கும்பம்

காலச்சக்கரத்தில் இரண்டாம் வீடான ரிஷபம் ராசியும் 11ம் வீடான கும்ப ராசியும் வாழ்க்கையில் சேரக்கூடாத ராசிகள். ரிஷபம் ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அடுத்தவர்முன் ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைப்படுவர் ஆனால் கும்ப ராசிக்காரர்கள் அப்படி வாழ விரும்ப மாட்டார்கள். சில நேரத்தில் இந்த இரண்டு ராசி இணைந்தால் வாழ்வில் பொறாமை குணம் அதிகரிக்கும். இதனால் வாழ்வில் பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. கடைசியில் பிரிவு ஏற்படவும் வாய்ப்புள்ளது. திருமணத்திற்கு வரன் தேடும் பெற்றோர்கள் இதை கவனமாக வைத்து கொள்ளுங்கள்

பொறுப்புதுறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்