தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Tirupati Laddu Prasadam: திருப்பதி லட்டு இனிமே இப்படித்தான் கிடைக்குமா?

Tirupati Laddu Prasadam: திருப்பதி லட்டு இனிமே இப்படித்தான் கிடைக்குமா?

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 05, 2023 01:08 PM IST

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதம் தயாரிக்க வெளிநாடுகளிலிருந்து இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட உள்ளன.

திருப்பதி லட்டு
திருப்பதி லட்டு

திருமலை திருப்பதி திருக்கோயிலில் பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது. திருப்பதி லட்டு தானே தனி தனித்துவம் உண்டு. தற்போது வரை இந்த பிரசாதம் கையால் பிடித்துத் தயாரிக்கப்பட்டு வருகிறது.

திருப்பதி லட்டு போல் வேறு எந்த இடத்திலும் தயாரிக்க முடியாது. அந்த அளவிற்கு அதன் சுவை தனித்துவமாக இருக்கும். அதற்காகவே இந்த லட்டுக்கு மவுசு அதிகம். கடந்த நிதியாண்டில் லட்டு விற்பனை மூலம் 365 கோடி ரூபாய் திருமலை திருப்பதி தேவஸ்தானம் வருவாய் ஈட்டி உள்ளது.

அதே சமயம் இந்த நிதியாண்டில் உண்டியல் வருவாய் ஆனது ஆயிரம் கோடி கிடைக்கும் எனத் தேவஸ்தானம் எதிர்பார்த்தது ஆனால் 1500 கோடியை நோக்கி உண்டியல் காணிக்கை சென்று கொண்டிருக்கிறது.

கொரோனா தொற்று காலத்திற்குப் பிறகு ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்த காரணத்தினால் 1500 கோடியைத் தாண்டி வருவாய் வந்து கொண்டிருக்கிறது. 1933 ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவே மிகப்பெரிய உண்டியல் வருவாய் எனத் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

உண்டியல் வருவாய் வங்கியில் நிரந்தர வைப்புத் தொகையாகப் போட்டு ஆண்டிற்கு 668 கோடி தேவஸ்தானம் வட்டியை ஈட்டி வருகிறது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் கிளைக் கோயில்கள் பல்வேறு மாநிலங்களில் அமைந்திருக்கின்றன.

அந்த அனைத்து கோயில்களுக்கும் திருப்பதியிலிருந்து லட்டு தயாரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டவர்கள். வேறு எங்கும் தயாரிக்கத் தேவஸ்தானம் அனுமதி தரவில்லை. இதனால் வரை லட்டு தயாரிக்க ஊழியர்கள் பயன்படுத்தப்பட்டு வந்தனர்.

தற்போது இதனைத் தயாரிக்க ஜெர்மனி, ஆஸ்திரேலியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளன. உயர்தர இயந்திரங்கள் மூலம் லட்டு தயாரிக்கத் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம்," லட்டு தயாரிப்பதற்கான தேவையான இயந்திரங்களை ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க முன் வந்துள்ளது. இதன் மூலம் லட்டு தயாரிப்பதற்கான அனைத்து விஷயங்களும் இயந்திர மயமாக்கிவிடும்" எனத் தெரிவித்துள்ளது.

WhatsApp channel

டாபிக்ஸ்