தமிழ் செய்திகள்  /  Astrology  /  Lord Shiva In The Form Of Light As A Great Lamp On The Top Of Tiruvannamalai Hill

karthigai deepam: மலையின் உச்சியில் அக்னியாய் காட்சியளித்த சிவபெருமான்

Suriyakumar Jayabalan HT Tamil
Dec 06, 2022 06:04 PM IST

திருவண்ணாமலை மலையின் உச்சியில் மகா தீபமாய் ஒளி வடிவில் சிவபெருமான் காட்சியளித்தார்.

திருவண்ணாமலை
திருவண்ணாமலை

சிவபெருமானும், முருகனும் அக்னியின் சொரூபமாகக் கூறப்படுகிறது. இவர்களைச் சிறப்பாக வழிபாடு செய்யும் நாளாக கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. சிவாலயங்களில் அக்னி ஸ்தலமாகக் கூறப்படும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் சிவன் குடி கொண்டிருக்கும் மலையாகக் கருதப்படுகிறது.

மலையின் உச்சியில் மாபெரும் தீபம் ஏற்றப்பட்டு கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதைக் காண்பதற்காகத் தமிழ்நாடு மட்டுமல்லாது வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருகின்றனர்.

கொரோனா கட்டுப்பாடு காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது கட்டுப்பாடுகள் தளுழத்தப்பட்டு இருப்பதால் ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

இறைவன் ஜோதி வடிவாய் திருவண்ணாமலையில் காட்சியளிக்கிறார் எனப் பக்தர்கள் நம்புகின்றனர். வெகு விமர்சையாக கொண்டாடப்படும் இந்த கார்த்திகை மகா தீபத் தீபத் திருவிழாவில் பக்தர்களின் பாதுகாப்புக் கருதி மாவட்ட நிர்வாகம் பல முன்னேற்பாடுகளைச் செய்துள்ளது.

திருவண்ணாமலையில் தீபம் ஏற்றிய பிறகு பலர் தங்களது வீட்டில் தீபம் ஏற்றும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்பட்டு பக்தர்களுக்குச் சிவபெருமான் ஒளி வடிவாய் காட்சி தருகிறார். இந்நிலையில் பக்தர்களும் தங்களது வீட்டில் விளக்கேற்றிக் கொண்டாடி வருகின்றனர்.

WhatsApp channel