தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sani Rahu Luck: சனியின் பார்வையில் ராகுவும் குருவும்..ராஜயோகம் எந்த ராசிக்கு?

Sani Rahu Luck: சனியின் பார்வையில் ராகுவும் குருவும்..ராஜயோகம் எந்த ராசிக்கு?

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 04, 2023 11:01 AM IST

குருபகவான் மற்றும் ராகு பகவான் இணைந்து மேஷ ராசியில் பயணம் செய்வதால் பலன் பெறப்போகும் ராசிகள்.

குருபகவான் மற்றும் சனி பகவான்
குருபகவான் மற்றும் சனி பகவான்

இந்த பயணமானது அக்டோபர் மாதம் வரை நீடிக்கும். சனிபகவான் மற்றும் குரு பகவானுக்கு மட்டுமே ராஜ கிரகங்களுக்கான அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த முறை ராகு, குரு மற்றும் சனி மூவரும் சேர்ந்து அதிர்ஷ்ட பலனை கொடுக்கப் போகின்றனர்.

சண்டாள யோகம்

குரு மற்றும் ராகு சேர்ந்திருக்கும் பொழுது சனி பகவானின் பார்வை பட்டால் அது மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. அப்படி உருவாகும் யோகம் தான் சண்டால யோகம் என அழைக்கப்படுகிறது. ராகு பகவான் மேஷ ராசியில் அமர்ந்துள்ளார். குருவுடன் இணைந்துள்ளார்.

மேஷ ராசி

உங்கள் ராசியில் பதினோராம் வீடான லாப ஸ்தானத்தில் குரு பகவான் பயணம் செய்வதால் மன அழுத்தம் நீங்கி தொழிலில் லாபம் அதிகரிக்கும். தன்னம்பிக்கை அதிகமாகும். உங்களுக்கு ஏற்றவாறு சூழ்நிலைகள் அமையும். கடந்த கால சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும்.

சிம்ம ராசி

ஒன்பதாம் வீடான பாக்கியஸ்தானத்தில் ராகுவுடன் குரு பகவான் பயணம் செய்கிறார். இதன் மூலம் உங்களுக்கு எதிர்பாராத நன்மைகள் கிடைக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்காத வாய்ப்புள்ளது. எதிர்பாராத யோக பலன்களை பெற போகின்றீர்கள். திடீர் அதிர்ஷ்டத்தால் திகைத்து நிற்க போகிறீர்கள்.

துலாம் ராசி

நீங்கள் சுக்கிர பகவானை அதிபதியாக கொண்டவர்கள். ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்தில் உங்களுக்கு நன்மைகள் கூட்டி கிடைக்கின்றது. திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் என அனைத்து பாக்கியங்களும் உங்களுக்கு கிடைக்கும். கணவன் மனைவி இடையே இருந்த சிக்கல்கள் தீரும். ராகு மற்றும் குரு இணைந்து உங்களுக்கு நன்மை செய்வார்கள்.

தனுசு ராசி

பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு மற்றும் குரு இணைந்து சஞ்சாரம் செய்கின்றனர். குரு பகவானின் அருள் பார்வை உங்களுக்கு கிடைக்கின்ற காரணத்தினால் எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். பண வரவிற்கு எந்த குறையும் இருக்காது. வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும்.

மீன ராசி

குருபகவான் ராகுவோடு இணைந்து குடும்ப இன்பத்தை உங்களுக்கு அள்ளிக் கொடுப்பார்கள். சனிபகவானின் பார்வையானது உங்களுக்கு நன்மையை தரப்போகின்றது. தனஸ்தானம் உங்களுக்கு வலுவாக இருக்கின்ற காரணத்தினால் பண வரவிற்கு எந்த குறையும் இருக்காது. எண்ணிலடங்கா பலன்கள் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் வரும். மனம் அமைதி பெறும்.

 

(பொறுப்புத்துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பொதுவான அடிப்படையில் உள்ளன. தெளிவாக தெரிந்து கொள்ள சரியான நிபுணரை அணுகி அறிந்து கொள்ளவும்.)

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

https://twitter.com/httamilnews

 

https://www.facebook.com/HTTamilNews

 

https://www.youtube.com/@httamil

 

Google News: https://bit.ly/3onGqm9

WhatsApp channel

டாபிக்ஸ்