தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  குரு செய்கைக்காரன்.. பண மழையை கொட்டுவார்.. அதிர்ஷ்டத்தை தருவார்.. உங்க ராசி இருக்கா?

குரு செய்கைக்காரன்.. பண மழையை கொட்டுவார்.. அதிர்ஷ்டத்தை தருவார்.. உங்க ராசி இருக்கா?

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 05, 2024 11:04 AM IST

Guru Bhagavan: குரு பகவான் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக ஜோதிட சாஸ்திரம் கருதுகிறது. அந்த வகையில் குருபகவானின் ரிஷப சஞ்சாரத்தால் ஒரு சில ராசிகள் சிறப்பான பலன்களை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

குரு பகவான்
குரு பகவான்

குரு பகவான் மாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது குருபகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வரும் மே மாதம் ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். குரு பகவான் ரிஷப ராசிக்கு இடம் மாறுகின்ற காரணத்தினால் இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும்.

குரு பகவான் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக ஜோதிட சாஸ்திரம் கருதுகிறது. அந்த வகையில் குருபகவானின் ரிஷப சஞ்சாரத்தால் ஒரு சில ராசிகள் சிறப்பான பலன்களை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் குரு பகவான் நுழைகின்றார். இதனால் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பேச்சு திறமையால் காரியங்கள் முடிவடையும். அனைவருக்கும் பிடித்தவர்களாக நீங்கள் மாறுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். மே மாதத்திற்கு பிறகு உங்களுக்கு கூட்டுத் தொழில் முயற்சிகள் வெற்றி அடையும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த இலக்கை அடைவீர்கள்.

விருச்சிக ராசி

 

உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் குருபகவான் பயணம் செய்து வருகின்றார். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். மற்றவர்களிடத்தில் கவனம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும். கூட்டுத்தொழில் முயற்சிகள் நல்ல வெற்றியை அடையும். நிதி ரீதியாக உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வெளிநாட்டு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

ரிஷப ராசி

 

உங்கள் ராசியில் முதல் வீட்டில் குருபகவான் உழைக்கின்றார். இதனால் உங்களுக்கு நீண்ட நாள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். வேலை தொடர்பான பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்ப உறுப்பினர்களால் உங்களுடைய தேவைகள் நிவர்த்தி ஆகும் திருமண வாழ்க்கையில் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். நவபஞ்ச யோகம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும். வெற்றிகள் அனைத்தும் உங்களைத் தேடி வரும். குழந்தைகளால் நல்ல செய்தி உங்களை தேடி வரும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel