தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sun Transit: சூரியன் தரும் ராஜயோகம்.. அதிர்ஷ்டசாலி ராசிகள் இவர்கள்தான்

Sun Transit: சூரியன் தரும் ராஜயோகம்.. அதிர்ஷ்டசாலி ராசிகள் இவர்கள்தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Dec 13, 2023 11:35 AM IST

சூரியனின் இடமாற்றத்தால் அதிர்ஷ்டத்தை பெறும் ராசிகளுக்கு காண்போம்.

சூரிய பெயர்ச்சி
சூரிய பெயர்ச்சி

நவகிரகங்களின் தலைவனாக விளங்கி வரும் சூரிய பகவான் சிம்ம ராசியின் அதிபதியாக விளங்கி வருகிறார். தற்போது விருச்சிக ராசிகள் பயணம் செய்து வரும் சூரிய பகவான் வரும் டிசம்பர் 16ஆம் தேதி அன்று தனுசு ராசிக்குள் செல்கிறார். இது குருபகவானின் ராசியாகும்.

டிசம்பர் மாதம் நடுவில் இந்த இடமாற்றம் நடைபெற உள்ளது. சூரியபகவான் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. சூரியனும், குருவும் நண்பர்கள் என்பதால் இந்த இடமாற்றம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என கூறப்படுகிறது. 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் ராஜயோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது தெரிந்து கொள்ளலாம்.

மிதுன ராசி

 

சூரிய பகவான் உங்கள் ராசியில் ஏழாம் வீட்டிற்கு செல்வதால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகின்றது. காதல் மற்றும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். கணவன் மனைவி கடையே அன்பு அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் மன தைரியம் அதிகரிக்கும்.

கன்னி ராசி

 

சூரிய பகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றேன்றார். உங்கள் ராசியில் நான்காம் வீட்டில் பயணம் செய்ய உள்ளார். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நிலுவையில் இருந்த தொகைகள் உங்களைத் தேடி வரும் குடும்ப உறவில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். முக்கியமான வேலைகள் அனைத்தும் நிறைவடையும்.

தனுசு ராசி

 

சூரிய பகவான் உங்களுக்கு நம்பிக்கையை அதிகப்படுத்துவார். நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். புதிய வேலைகள் நல்ல முறையில் தொடக்கம் அடையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். குடும்ப உறவுகளில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணவரவில் எந்த குறையும் இருக்காது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel

டாபிக்ஸ்