தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சனி மிரட்டுகிறார்.. அதிர்ஷ்டம் ஏப்ரல் மாதம் தொடக்கம்.. பணமழை கொட்டுவது உறுதி.. யோகம் வந்துவிட்டது

சனி மிரட்டுகிறார்.. அதிர்ஷ்டம் ஏப்ரல் மாதம் தொடக்கம்.. பணமழை கொட்டுவது உறுதி.. யோகம் வந்துவிட்டது

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 24, 2024 10:49 AM IST

Lord Sani: சனிபகவான் வரும் ஏப்ரல் ஏழாம் தேதி அன்று பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகின்றார். இது குரு பகவானின் நட்சத்திரமாகும். சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர்.

சனிப்பெயர்ச்சி
சனிப்பெயர்ச்சி

சனிபகவான் 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். இந்த ஆண்டு சனி பகவானின் ஆண்டாக கருதப்படுகிறது. சனி பகவானின் ஒவ்வொரு அசைவும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் சனி பகவான் நட்சத்திர இடமாற்றத்தில் செய்ய உள்ளார்.

சனிபகவான் வரும் ஏப்ரல் ஏழாம் தேதி அன்று பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகின்றார். இது குரு பகவானின் நட்சத்திரமாகும். சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு லாபகரமானதாக அமைந்துள்ளது. நிதி நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும். ஆடம்பர வசதிகள் உங்களைத் தேடி வரும். குழந்தைகளுக்கு மகிழ்ச்சியான யோகங்கள் உண்டாகும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பழைய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பற்றி தரும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

ரிஷப ராசி

 

சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு யோகத்தை தரப்போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும். ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் அங்கு ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும். கூட்டுத் தொழில் முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை தரும்.

மிதுன ராசி

 

சனி பகவான் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சுபயோகங்களை கொடுக்க போகின்றது. ஏப்ரல் மாதம் முதல் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். மாணவர்கள் கல்வியை திறந்து விளங்குவார்கள். உடன் வேலை செய்பவர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். சனி பகவானின் அருளால் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel