தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru: குரு சம்பவம் தொடங்க போகுது..யாருக்கு யோகம் தெரியுமா?

Guru: குரு சம்பவம் தொடங்க போகுது..யாருக்கு யோகம் தெரியுமா?

Suriyakumar Jayabalan HT Tamil
Dec 13, 2023 12:32 PM IST

குரு பகவான் யோகம் பெற போகும் ராசிகளை காண்போம்.

குரு பகவான்
குரு பகவான்

நவகிரகங்களும் அவபோது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அப்போது 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்படும். அந்த வகையில் குரு பகவான் வரும் டிசம்பர் 31ஆம் தேதி அன்று வக்ர நிவர்த்தி அடைகிறார்.

குருபகவான் வரும் ஜனவரி மாதம் முதல் நேராக பயணம் செய்ய உள்ளார். அதேபோல 2024 ஆம் ஆண்டு மே மாதம் ரிஷப ராசிக்கு உள் நுழைகிறார். இதன் தாக்கம் பன்னிரண்டு ராசிகளுக்கும் இருந்தாலும் சில ராசிகள் யோகத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

குரு பகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். வீட்டில் மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். சிரமங்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். கடன் சிக்கல்கள் தீரும் பணவரவில் எந்த குறையும் இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். இதுவரை தொடர்ந்து வந்த சிக்கல்கள் அனைத்தும் படிப்படியாக குறைந்து விடும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் வரப்போகின்றது.

ரிஷப ராசி

 

குரு பகவான் உங்களுக்கு சுபயோகத்தை தரப் போகின்றார். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். தடைபட்டுக் கடந்த காரியங்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். வேலை செய்யும் இடத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். புதிய முயற்சிகள் நன்மையில் முடியும் கடுமையாக உழைத்தால் சாதனைகள் கிடைக்கும். குரு பகவான் பயம் இல்லாமல் உங்களை அழைத்துச் செல்வார்.

மிதுன ராசி

 

குருபகவான் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க போகின்றார். பண விரயம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது எனவே எச்சரிக்கையாக இருங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. சுப காரியங்களுக்கு செலவு ஏற்பட வாய்ப்பு உள்ளது பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருங்கள்.

கடக ராசி

 

குரு லாப ஸ்தானத்தில் அமர போகின்றார். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பணவரவில் இந்த குறையும் இருக்காது. வருமானம் அதிகரிக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆசைகள் நிறைவேற வேண்டிய தருணம் வந்துவிட்டது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel

டாபிக்ஸ்