Sani Peyarchi Palan 2024: சனி நட்சத்திர அடி.. திருமண பாக்கியம்.. குழந்தை பாக்கியம்.. பண மழையில் நனையும் ராசிகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sani Peyarchi Palan 2024: சனி நட்சத்திர அடி.. திருமண பாக்கியம்.. குழந்தை பாக்கியம்.. பண மழையில் நனையும் ராசிகள்

Sani Peyarchi Palan 2024: சனி நட்சத்திர அடி.. திருமண பாக்கியம்.. குழந்தை பாக்கியம்.. பண மழையில் நனையும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 17, 2024 09:54 AM IST

ஏப்ரல் மாதம் ஏழாம் தேதி என்று பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகின்றார். சனிபகவானின் நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் சில ராசிகளுக்கு பணம் மழையை பொழியப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

சனிப்பெயர்ச்சி
சனிப்பெயர்ச்சி

இந்த 2024 ஆம் ஆண்டு சனிபகவானின் ஆண்டாக கருதப்படுகிறது. வரும் 2025 ஆம் ஆண்டு தானத்தை இடத்தை மாற்றுகிறார். சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் தற்போது சனிபகவான் நட்சத்திர இடமாற்றத்தை செய்யப் போகின்றார்.

வரும் ஏப்ரல் மாதம் ஏழாம் தேதி என்று பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகின்றார். சனிபகவானின் நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் சில ராசிகளுக்கு பணம் மழையை பொழியப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு லாபகரமானதாக அமையப்போகின்றது. ஆடம்பர வசதிகள் உங்களைத் தேடி வரும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். குடும்பத்தின் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

ரிஷப ராசி

 

சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு லாபகரமானதாக அமைந்துள்ளது. பண வரவிலிருந்து குறையும். இருக்காது நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும்.

மிதுன ராசி

 

சனிபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு வாழ்க்கையில் நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. ஏப்ரல் மாதம் முதல் உங்களுக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்க போகின்றது எடுத்த காரியங்கள் அனைத்தும். வெற்றி அடையும் மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். மாணவர்கள் கல்விகள் சிறந்து விளங்குவார்கள். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

Whats_app_banner