தமிழ் செய்திகள்  /  Astrology  /  Who Is Going To Win The Election Due To Guru Transfer

Guru Transfer: குரு பெயர்ச்சி 2024 - யார் யாரெல்லாம் தேர்தலில் வெற்றிவாகை சூடப்போகும் ராசிகள் தெரியுமா?

Marimuthu M HT Tamil
Mar 16, 2024 11:11 PM IST

குரு பகவானால் அதிர்ஷ்டம்பெற்று, தேர்தலில் வெல்லப்போகும் ராசிகள் குறித்துக் காண்போம்.

குரு
குரு

ட்ரெண்டிங் செய்திகள்

குரு பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வரும் மே ஒன்றாம் தேதியன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார்.

மேஷம்: இந்த ராசியினருக்கு வியாழன் பகவான் எனப்படும் குரு பகவான், வரும் ராசியில் 2ஆம் இல்லமான ரிஷப ராசிக்குச் செல்லவுள்ளார். ஆகையால், அயல்நாடுகளில் ஆர்டர்கள் தேடும் தொழில் முனைவோருக்கு நல்ல வாய்ப்புக் கிடைக்கும். அதுமட்டுமின்றி, சிலருக்கு பணியில் வளர்ச்சியும் சந்தோஷமும் கிட்டும். வயதில் மூத்தவர்களுடன் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் மறையும். மனதில் இருந்த குழப்பங்கள் தீரும். இனிமையாகப் பேசினால் வெற்றிவாகை சூடுவது உறுதி. நரசிம்மனை வழிபடுவது நற்பலன் தரும்.

சிம்மம்: இந்த ராசியினருக்கு குரு பெயர்ச்சி பிரமாதமாக இருக்கிறது. இந்த ராசியினர் தேர்தலில் நின்றால் வெல்லலாம். தேர்தல் பணி செய்தால் கட்சியில் முக்கியப் பொறுப்பினை சம்பாதிக்கலாம். புதிய வீடு, வீட்டடி மனை, சொத்து வாங்கும் யோகம் குரு பெயர்ச்சியில் சிம்மத்திற்கு வாய்த்துள்ளது. குலதெய்வத்தை இருக்கப் பிடித்துக்கொண்டால் வெற்றி தான்.

கன்னி: இந்த ராசியினருக்கு குரு பெயர்ச்சியால் திருமணத்தடை நீங்கும். வரன் அமையும். பிரிந்த கணவன் - மனைவி சேர்வார்கள். தொழில் செய்தால் இரட்டிப்பு லாபமும், பணியில் அடுத்த நிலையையும் எட்டுவீர்கள். தேர்தல் சார்ந்த பணிகளில் ஈடுபட்டால் ஜெயம் உண்டாகும்.

விருச்சிகம்: இந்த ராசியினருக்கு குரு பெயர்ச்சியால் கணவன் - மனைவி இடையே இருந்த பிரச்னைகள் நீங்கும். அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பப் பிரச்னையினால் பிரிந்த குடும்பங்கள் சேரப்போகின்றன. பணியிடத்தில் புதிய இடமாற்றம் உண்டாகும். தொழில் வளர்ச்சி ஏற்படும். தயவு செய்து முன்கோபத்தையும் பிடிவாதத்தையும் தடுத்தால் வாழ்க்கை வெற்றியை நோக்கி செல்வது உறுதி. தேர்தல் பணி செய்தால் வாய்ப்புகள் சாதகமாகும்.

மகரம்: இந்த ராசியினருக்கு, குரு பகவான் ஐந்தாம் இல்லத்துக்கு வருவதால், புதிய வேலை தேடினால் நல்ல ஊதியத்துடன் உயர்வான பணிக்குச் செல்வர். பூர்வீக சொத்துகளில் இருந்த வில்லங்கம் நீங்கும். புகழ்மிக்கவர்களின் பழக்கவழக்கம் கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

WhatsApp channel

டாபிக்ஸ்