தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Rahu Ketu: ராகு கேது வருகின்றனர்.. தெறித்து ஓட வேண்டிய ராசிகள்

Rahu Ketu: ராகு கேது வருகின்றனர்.. தெறித்து ஓட வேண்டிய ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Nov 17, 2023 01:13 PM IST

ராகு கேது இடப்பெயர்ச்சியால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்களை காண்போம்.

ராகு கேது இடப்பெயர்ச்சி
ராகு கேது இடப்பெயர்ச்சி

அதற்குப் பிறகு நவகிரகங்களில் நிழல் கிரகங்களாக விளங்கக்கூடிய ராகு மற்றும் கேது மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகங்களாக இருந்து வருகின்றனர். இவர்கள் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றனர்.

ராகு மற்றும் கேது இந்த இரண்டு கிரகங்களும் ஒரே நிலையில் பயணம் செய்யக்கூடியவர்கள். பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ளும் இவர்கள் கடந்த அக்டோபர் 30ம் தேதி அன்று தங்களது ராசியை மாற்றிக் கொண்டனர். இவர்களின் இடமாற்றம் சிலருக்கு யோகத்தை கொடுத்தாலும் சிலருக்கு பாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

ராகு மற்றும் கேது இடமாற்றமானது உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்காது. உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். பண வரவு இருந்தாலும் செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எதிரிகளிடம் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் மன உளைச்சல் ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையே சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

தனுசு ராசி

 

ராகு மற்றும் கேது பகவான்களிடம் நீங்கள் சற்று கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இவர்களின் இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை தராத சூழ்நிலை உருவாகியுள்ளது. சுற்றியுள்ள சிக்கல்களால் உங்களுக்கு மன உளைச்சல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மற்றவர்களிடம் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். புதிய முயற்சிகளின் போது நன்கு சிந்தித்து களமிறங்க வேண்டும். திருமண வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும்.

சிம்ம ராசி

 

எதிர்பாராத நேரத்தில் சங்கடங்கள் ஏற்படுத்தக்கூடிய திருப்பங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் சிக்கல்கள் ஏற்பட்டால் அமைதியாக செல்வது நல்லது. பண பரிவர்த்தனைகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும் சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்