தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Mercury Luck: புதன் விரட்டப் போகும் ராசிக்காரர்கள் இவர்கள்தான்

Mercury Luck: புதன் விரட்டப் போகும் ராசிக்காரர்கள் இவர்கள்தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Dec 30, 2023 12:30 PM IST

Mercury Transit: புதன் பகவானால் சிரமப்பட போகும் ராசிகளை காண்போம்.

புதன் பெயர்ச்சி
புதன் பெயர்ச்சி

நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அந்த காலகட்டத்தில் 12 ராசிகளுக்கும் நவக்கிரகங்களால் தாக்கம் இருக்கும்.

புதன் பகவான் தனுசு ராசியில் பயணம் செய்து வருகிறார். கடந்த டிசம்பர் 13ஆம் தேதி அன்று புதன் பகவான் தனுசு ராசியில் வக்ர பெயர்ச்சி அடைந்தார். இவருடைய பின்னோக்கிய பயணமானது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இருப்பினும் சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

கடக ராசி

 

புதன் பகவான் உங்களது ஆறாவது வீட்டில் பின்னோக்கிய பயணத்தில் இருந்து வருகிறார். பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் குறையக்கூடிய சூழ்நிலை உண்டாகும். உடன் பிறந்தவர்களால் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது பணம் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

மேஷ ராசி

 

புதன் பகவான் ஒன்பதாவது வீட்டில் பின்னோக்கிய பயணத்தில் இருக்கிறார். பேசும்போது மற்றவர்களுடன் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பெரிய சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. உடன் பிறந்தவர்களால் சிக்கல்கள் ஏற்படும் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். நீண்ட தூர பயணத்தை தவிர்ப்பது நல்லது. எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ரிஷப ராசி

 

புதன் பகவான் உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் பின்னோக்கிய பயணத்தில் இருந்து வருகிறார். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். திருமண வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பேச்சில் கவனமாக இருப்பது நல்லது. அதிக செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கடன் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருந்தால் தப்பித்துக் கொள்ளலாம்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel