தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ketu Nakshatra: கேது புரட்டி பார்த்து விட்டார்.. இந்த ராசிகளை விட மாட்டார்

Ketu Nakshatra: கேது புரட்டி பார்த்து விட்டார்.. இந்த ராசிகளை விட மாட்டார்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 08, 2024 12:35 PM IST

கேது பகவானின் நட்சத்திர இடமாற்றத்தால் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கும் ராசிகளை காண்போம்.

கேது பெயர்ச்சி
கேது பெயர்ச்சி

அந்த வகையில் கேது பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். கடந்தாண்டு அக்டோபர் மாத இறுதியில் கேது பகவான் கன்னி ராசியில் நுழைந்தார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். கேது பகவான் என்ற ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் கேது பகவான் கடந்த மார்ச் 4ஆம் தேதி அன்று சந்திர பகவானின் நட்சத்திரமான அஸ்தம் நட்சத்திரத்தில் நுழைந்தார். வரும் நவம்பர் 10ஆம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்ய உள்ளார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சிலர் ராசிகள் ராஜயோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே காணலாம்.

மேஷ ராசி

உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் கேது பகவான் இருக்கின்றார். உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். நல்ல பலன்கள் உங்களைத் தேடி வரும். கடன் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். பெற்றோரின் உதவி உங்களுக்கு கிடைக்கும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். காரிய தடைகள் அனைத்தும் நீங்கும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

சிம்ம ராசி

 

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் கேது பகவான் பயணம் செய்து வருகின்றார். உங்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கின்றது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். கடின உழைப்பு நல்ல படங்களை பெற்று தரும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்கள் எங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

தனுசு ராசி

 

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் கேது பகவான் பயணம் செய்து வருகின்றார். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். சிறப்பான பலன்கள் உங்களுக்கு தேடி வரும். குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel