தமிழ் செய்திகள்  /  Astrology  /  Let Us See The Rasis That Will Be Affected By The Transit Of Lord Mars

Lord Mars: முரட்டு அடி கொடுக்கும் செவ்வாய்.. மார்ச் மாதத்தில் இருந்து தொடங்கி விட்டார்.. அதிரடி ஆட்டம் ஆரம்பம்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 17, 2024 10:51 AM IST

Lord Mars: தற்போது சனி பகவானோடு செவ்வாய் பகவான் இணைந்துள்ளார். இருப்பினும் செவ்வாய் பகவானின் இடமாற்றத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அசுப பலன்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

செவ்வாய் பெயர்ச்சி
செவ்வாய் பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

கிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்நிலையில் செவ்வாய் பகவான் மார்ச் 15ஆம் தேதி அன்று கும்ப ராசியில் நுழைந்தார். கும்ப ராசியில் ஏற்கனவே சனி பகவான் பயணம் செய்து வருகின்றார். இது சனிபகவானின் சொந்த ராசியாகும்.

தற்போது சனி பகவானோடு செவ்வாய் பகவான் இணைந்துள்ளார். இருப்பினும் செவ்வாய் பகவானின் இடமாற்றத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அசுப பலன்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

செவ்வாய் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. வாழ்வில் மகிழ்ச்சிகள் அதிகரிக்கும். மற்றவர்களிடம் பேசும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மன தைரியம் உங்களை காப்பாற்றும். மாணவர்கள் கல்வியில் சற்று கவனமாக இருப்பது நல்லது தேவையில்லாத அலைச்சல் ஏற்படக்கூடும். எனவே எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

மிதுன ராசி

 

செவ்வாய் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சில ஏற்ற இறக்கங்களை கொடுக்கும். மன நிலைமையில் அவ்வப்போது சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மனக்குழப்பத்தோடு இருக்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும். மகிழ்ச்சியான செய்திகள் உங்களைத் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் மிகவும் கவனமாக பேசுவது நல்லது.

கடக ராசி

 

குடும்பத்தினரிடம் பேசும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மனதில் சில குழப்பங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எதிர்மறையான சிந்தனைகள் உங்களுக்கு அதிகம் ஏற்படுவதற்கான சூழ்நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எதிரிகளால் ஏற்படும் சிக்கல்களில் இருந்து தப்பித்துக் கொள்வீர்கள். கணவன் மனைவிகளை சிக்கல்கள் ஏற்படக்கூடும். எனவே பேசும்போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

சிம்ம ராசி

 

தன்னம்பிக்கைக்கு எந்த குறையும் இருக்காது. ஆனால் எதிர்மறையான எண்ணங்கள் உங்களை சிக்கலில் கொண்டு சேர்க்கும். நடுநிலையோடு நடந்து கொண்டால் தப்பித்துக் கொள்ளலாம். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனம் தேவை. பெற்றோர்களின் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனம் தேவை. கல்வித்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல காலம் பிறந்து விட்டது. இருப்பினும் குடும்பத்தினரிடம் சற்று கவனமாக இருப்பது நல்லது.

கன்னி ராசி

 

செவ்வாய் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சில சிக்கல்களை ஏற்படுத்தக் கூடும். மனவேதனைகள் அதிகரிக்க கூடிய சூழ்நிலை உண்டாகும். தன்னம்பிக்கையோடு அனைத்து சிக்கல்களையும் எதிர்கொண்டால் வெற்றி காணலாம். கடின உழைப்பு உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். குடும்பத்தில் இந்த சிக்கல்களும் இருக்காது. நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். மற்றபடி வெளியே இருப்பவர்களிடமிருந்து சிக்கல்கள் வரக்கூடிய சூழ்நிலை ஏற்படும் எனவே எச்சரிக்கையாக இருங்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

WhatsApp channel