HT Yatra: நோயால் அவதிப்பட்ட செவ்வாய் பகவான்.. மருத்துவராக மாறிய சிவபெருமான்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ht Yatra: நோயால் அவதிப்பட்ட செவ்வாய் பகவான்.. மருத்துவராக மாறிய சிவபெருமான்

HT Yatra: நோயால் அவதிப்பட்ட செவ்வாய் பகவான்.. மருத்துவராக மாறிய சிவபெருமான்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 29, 2024 07:10 AM IST

அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில் வரலாறு குறித்து இங்கே காண்போம்.

வைத்தீஸ்வரன் கோவில்
வைத்தீஸ்வரன் கோவில்

இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் வைத்தியநாதனாகவும், அம்பாள் தையல்நாயகியாகவும் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். சிவபெருமானின் பெயரை இந்த ஊருக்கும் வைக்கப்பட்டுள்ளது வைத்தீஸ்வரன் கோவில் என்று கூறினால் தமிழ்நாட்டில் தெரியாதவர்களே இருக்க முடியாது.

தல சிறப்புகள்

 

இந்த கோயிலில் இருக்கக்கூடிய மரகத லிங்கம் மிகவும் புகழ்பெற்றதாகும் இந்த கோயிலில் தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன இரண்டு கொடி மரங்கள் உள்ளன. சிவன் சன்னதிக்கு பின்புறம் நேர்கோட்டில் நவக்கிரகங்கள் அமைந்துள்ளன.

இந்த கோயிலில் செவ்வாய் பகவானுக்கு என தனி சன்னதி உள்ளது. இது செவ்வாய் பகவானின் பரிகாரத்தலமாக விளங்கி வருகிறது. சிவபெருமானின் தேவார பாடல் பெற்ற 274 கோயில்களில் இது 16வது தலமாக விளங்கி வருகிறது. சோழர்களால் இந்த கோயில் கட்டப்பட்டது.

இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் சித்தர்கள் அமிர்தத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டுள்ளனர். அதிலிருந்து சிந்து சிதறிய அமிர்தம் கோயிலில் இருக்கக்கூடிய தீர்த்த குளத்தில் கலந்துள்ளது. இந்த குளத்தில் 18 தீர்த்தங்கள் கலந்துள்ளதாக கூறப்படுகிறது இந்த குளத்தில் நீராடினால் அனைத்து விதமான நோய்களும் அகலும் என நம்பப்படுகிறது. இது சித்தாமிர்த தீர்த்தம் என அழைக்கப்படுகிறது.

இந்த கோயிலில் சென்று வழிபட்டால் பல்வேறு விதமான நோய்கள் குணமாகும் எனக் கூறப்படுகிறது. இந்த கோயிலில் அபிஷேக தீர்த்தம் அபிஷேக சந்தனம் வேப்ப இலை புற்று மண் விபூதி உள்ளிட்டவைகள் கொண்டு திருச்சாந்து உருண்டை தயாரிக்கப்படுகிறது. இதனை சாப்பிட்டால் அனைத்து விதமான நோய்களும் குணமாகும் என கூறப்படுகிறது.

செவ்வாய் பகவான் வரலாறு

 

அங்காரகன் என அழைக்கப்படும் செவ்வாய் பகவான் ஒரு முறை வெண்குஷ்ட நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். அப்போது வைத்தீஸ்வரன் கோயிலுக்கு சென்று ஒரு மண்டலம் சித்தா அமிர்த குலத்தில் குளித்துவிட்டு வைத்தியநாதரை வழிபட்டால் உங்களது நோய் குணமாகும் என அசரீரி கேட்டுள்ளது. அதேபோல செவ்வாய் பகவானும் இந்த கோவிலுக்கு வந்து தீர்த்தத்தில் குளித்துவிட்டு வைத்தியநாதசுவாமி வழிபாடு செய்துள்ளார்.

இவருடைய நோய்க்கு சிவபெருமான் மருந்து தயார் செய்து தையல் பாத்திரத்தை பார்வதி தேவி கொடுத்துள்ளார். அதன் பின்னர் செவ்வாய் பகவானுக்கு நோய் குணமாகி உள்ளது. அதனால் சிவபெருமான் வைத்தியநாதன் எனவும், தாயார் தைலநாயகியாகவும் இந்த கோயிலில் வீற்றிருந்து அருள்பாலித்து வருகின்றனர்.

இந்த திருத்தலம் செவ்வாய் தோஷ நிவர்த்தி தளமாக விளங்கி வருகிறது செவ்வாய் பகவானால் ஏற்பட்டு வரும் தடைகளை நிவர்த்தி செய்யும் தளமாக திகழ்ந்து வருகிறது. சொத்து சிக்கல்கள், கடன் தொல்லைகள், உடல் நோய்கள் உள்ளிட்டவற்றை நிவர்த்தி செய்யும் தளமாக விளங்கி வருகிறது.

இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய இறைவனை ஜடாயு வழிபட்டு அருள் பெற்றுள்ளார். ராமபிரான் இந்த கோயிலுக்கு வந்து ஜடாயுவின் உடலை தகனம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய முருகப்பெருமான் செல்வ முத்துக்குமார் என அழைக்கப்படுகிறார். தனது தந்தையையும் தாயையும் இந்த கோயிலில் முருகப்பெருமான் வழிபட்டு வரம் பெற்றதாக கூறப்படுகிறது. அதன் காரணமாகவே இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய முருக பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.

வசதிகள்

 

வைத்தீஸ்வரன் கோவில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ளது. மயிலாடுதுறையில் இருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் இந்த கோயில் அமைந்துள்ளது. தென்னிந்தியா சுற்றுலா தலங்களில் மிகப்பெரிய தளமாக இது திகழ்ந்து வருகின்ற காரணத்தினால் இந்த கோயிலுக்கு அடிக்கடி பேருந்து வசதிகள் உள்ளன. தங்கமிடம் வசதிகளும் உள்ளன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

Whats_app_banner