தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Rajayoga: குருவோடு சேர்ந்தார் சூரியன்.. பணமழை உறுதியான ராசிகள்

Guru Rajayoga: குருவோடு சேர்ந்தார் சூரியன்.. பணமழை உறுதியான ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 08, 2024 01:55 PM IST

சூரிய பகவானால் ராஜயோகத்தை பெற்ற ராசிகளை காண்போம்.

சூரிய பெயர்ச்சி
சூரிய பெயர்ச்சி

தற்போது சனிபகவானின் ராசியான கும்ப ராசியில் சூரிய பகவான் பயணம் செய்து வருகின்றார். வரும் மார்ச் 14ஆம் தேதி அன்று குரு பகவான் என் ராசியான மீன ராசியில் நுழைகின்றார். ஜோதிட சாஸ்திரத்தின் படி குரு பகவானும் சூரிய பகவானும் நண்பர்கள் கிரகமாக விளங்கி வருகின்றனர்.

தனது நண்பரான குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்கின்ற காரணத்தினால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் குறிப்பிட்ட மூன்று ராசிகள் சூரிய பகவானால் அதிர்ஷ்டத்தின் பலனை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மீன ராசி

 

உங்கள் ராசியில் முதல் வீட்டில் சூரியன் உளைகின்றார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. தன்னம்பிக்கை அதிகரிக்கும் அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். கூட்டு தொழில் முயற்சிகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். புதிய உறவுகள் உங்களைத் தேடி வரும்.

தனுசு ராசி

 

உங்கள் ராசியில் சூரிய பகவான் நான்காவது வீட்டிற்கு வருகின்றார். இதனால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். சூரிய பகவானின் அருளால் மன அமைதி உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அலுவலகத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.

கடக ராசி

 

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சூரியன் வருகின்றார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பயணங்களால் நல்ல பலன்கள் கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel