Ketu: வேட்டையன் வந்துட்டான்.. இனி சொல்லி அடிப்பார் கேது.. பண ராசிகள் நீங்கதான்.. இனி இது போதும்-let us see about the zodiac signs where ketu lord will get wet in money rain - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ketu: வேட்டையன் வந்துட்டான்.. இனி சொல்லி அடிப்பார் கேது.. பண ராசிகள் நீங்கதான்.. இனி இது போதும்

Ketu: வேட்டையன் வந்துட்டான்.. இனி சொல்லி அடிப்பார் கேது.. பண ராசிகள் நீங்கதான்.. இனி இது போதும்

Suriyakumar Jayabalan HT Tamil
Oct 01, 2024 12:01 PM IST

zodiac signs: கேது பகவானின் சிம்ம ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் மிகப்பெரிய பலன்களை 18 மாதங்கள் பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Ketu: வேட்டையன் வந்துட்டான்.. இனி சொல்லி அடிப்பார் கேது.. பண ராசிகள் நீங்கதான்.. இனி இது போதும்
Ketu: வேட்டையன் வந்துட்டான்.. இனி சொல்லி அடிப்பார் கேது.. பண ராசிகள் நீங்கதான்.. இனி இது போதும்

சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இவர் விளங்கி வருகின்றார். ராகு மற்றும் கேது எப்போதும் இணைபிரியாத கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். வெவ்வேறு ராசிகளில் பயணம் செய்தாலும் இவர்களுடைய செயல்பாடு ஒரே மாதிரி இருக்கும்.

அந்த வகையில் கேது பகவான் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் கன்னி ராசியில் தனது பயணத்தை தொடங்கினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். கேது பகவான் வருகின்ற மே 18ஆம் தேதி 2025 ஆம் ஆண்டு சிம்ம ராசிக்கு செல்கிறார். கேது பகவானின் சிம்ம ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் மிகப்பெரிய பலன்களை 18 மாதங்கள் பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மிதுன ராசி

உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் கேது பகவான் பயணம் செய்யப்போகின்றார். எதனால் உங்களுக்கு 2025 ஆம் ஆண்டு மகிழ்ச்சியான ஆண்டாக இருக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.

திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வேலை இல்லாதவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கக்கூடும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

துலாம் ராசி

2025 ஆம் ஆண்டு கேது பகவான் உங்களுக்கு சிறப்பான ஆண்டாக மாற்றிக் கொடுப்பார். உங்கள் ராசியில் 11 ஆவது வீட்டில் சஞ்சாரம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு வாழ்க்கையில் அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். புதிதாக செய்யப்பட்ட முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றி அடையும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். 

விருப்பங்கள் அனைத்தும் உங்களுக்கு நிறைவேறும். முழு கவனத்துடன் செயல்பட வேண்டிய காலமாக இது அமையும். நீங்கள் விரும்பிய பாடல்கள் அனைத்தும் உங்களுக்கு கச்சிதமாக கிடைக்கும். காதல் விவகாரத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். இருப்பினும் சற்று கவனமாக இருப்பது நல்லது. வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner