தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Karma: உங்கள் கர்ம வினை தீர வேண்டுமா? இந்த பரிகாரத்தை மட்டும் மறக்காதீங்க!

Karma: உங்கள் கர்ம வினை தீர வேண்டுமா? இந்த பரிகாரத்தை மட்டும் மறக்காதீங்க!

Pandeeswari Gurusamy HT Tamil
Sep 27, 2023 11:52 AM IST

கர்மா என்பது ஒரு மனிதனின் தலை விதி அல்ல அது நம் கர்ம வினை ஆகும்.

வில்வம், மிளகு, தர்பை
வில்வம், மிளகு, தர்பை

கர்மா அல்லது வினைப்பயன் என்பது நாம் ஒவ்வொருவரின் தற்போது மற்றும் முந்தைய ஜென்மத்தின் போது நாம் செய்த செயல்களின் கூட்டு விளைவு ஆகும். இது எதிர்காலத்தில் நம் தலை விதியை தீர்மானிக்கிறது. இதனால் கர்மா என்பது ஒரு மனிதனின் தலை விதி அல்ல அது நம் கர்ம வினை ஆகும்.

பரிகாரம்

இந்த கர்ம வினையை போக்கும் ஒரு எளிய பரிகாரம் குறித்து இங்கு பார்க்கலாம். பிரதோஷம் அன்று 2 வில்வ இலைகளை மென்று விழுங்க வேண்டும். அப்போது எங்களின் கர்ம வினைகள் எல்லாவற்றையும் தீருங்கள் சிவபெருமானே என்று மனமுருகி வழிபட வேண்டும். இந்த இலை கொஞ்சம் கசந்தாலும் உடலில் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு நம் கர்ம வினைகளையும் போக்கும் என்பது நம்பிக்கை.

நம் உடலில் 3 மலத்தை நீங்க வேண்டும்.

1. கர்மா

2. ஆணவம்3

3. மாயை ஆகியவை 3 மலங்கள் ஆகும். இது நம்மை வாழ்வில் எப்போதும் முன்னேர விடாமல் எழ எழ மீண்டும் சறுக்கலை ஏற்படுத்தும். 

சிவ பெருமானுக்கு வில்வ மாலை சாத்தி வழிபட வேண்டும்.

பிரதோசத்தன்று வீட்டில் சின்ன பாத்திரத்தில் சிறிய குச்சிகளை போட்டு அதில் மிளகை வைத்து பச்ச கற்பூரம் ஏற்றி எரிய விட வேண்டும். அதில் கொஞ்சம் தர்ப்பையை போட வேண்டும். அந்த தீயின் முன் அமர்ந்து என் வாழ்வில் உள்ள கர்மாவை இந்த தீயில் கரைக்கிறேன் என்று எண்ணி வழிபட வேண்டும். இப்படி எரிந்த பொருட்களால் கிடைத்த சாம்பலை அடுத்த நாள் கால் படாத இடத்தில் போட்டு விட வேண்டும்.

இப்படி தொடர்ந்து பிரதோஷத்தன்று செய்து வந்தால் நம் வாழ்வில் எத்தனை தடங்கல்கள் வந்ததாலும் அதிலிருந்து விடுபட்டு கர்மா குறைய உதவும்.

பொறுப்புதுறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்