Today Rasipalan (28.04.2024): மேஷம் முதல் மீனம் வரை லாபம் யாருக்கு?.. இன்றைய ராசி பலன்கள் இதோ!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasipalan (28.04.2024): மேஷம் முதல் மீனம் வரை லாபம் யாருக்கு?.. இன்றைய ராசி பலன்கள் இதோ!

Today Rasipalan (28.04.2024): மேஷம் முதல் மீனம் வரை லாபம் யாருக்கு?.. இன்றைய ராசி பலன்கள் இதோ!

Karthikeyan S HT Tamil
Published Apr 28, 2024 05:57 AM IST

Today Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்று (ஏப்ரல் 28) வேலை, தொழில், வருமானம், உடல்நலம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ஏப்ரல் 28ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை ஒவ்வொன்றாக காணலாம்.
ஏப்ரல் 28ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை ஒவ்வொன்றாக காணலாம்.

இது போன்ற போட்டோக்கள்

மேஷம்

திறமைகளை வெளிப்படுத்திப் பாராட்டுகளை பெறுவீர்கள். உயர் அதிகாரிகளிடத்தில் அளவுடன் இருக்கவும். மனதில் புதுவிதமான தேடல் பிறக்கும். கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். பொறுமை வேண்டிய நாள்.

ரிஷபம்

மறைமுகமான சில தடைகளால் காலதாமதம் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் பொறுப்பும், அலைச்சலும் உண்டாகும். உயர் கல்வி குறித்த செயல்பாடுகளில் பொறுமை காக்கவும். மனதில் வித்தியாசமான கற்பனைகள் மேம்படும்.

மிதுனம்

ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். சிந்தனைகளில் தெளிவு உண்டாகும். எதிர்பாலின மக்களால் அனுகூலம் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். தனவரவுகளின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும்.

கடகம்

திடீர் பயணங்களால் புதிய அனுபவம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிகளில் சாதகமான சூழல் அமையும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். அணுகுமுறைகளில் சில மாற்றங்கள் ஏற்படும்.

சிம்மம்

குடும்ப உறுப்பினர்களுடன் வெளியூர் பயணம் சென்று வருவீர்கள். பொன், பொருட்சேர்க்கை குறித்த எண்ணம் மேம்படும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

கன்னி

ஆரோக்கியத்தில் இருந்துவந்த மந்தத்தன்மை விலகும். வீடு மாற்றம் குறித்த எண்ணம் மேம்படும். மாணவர்களுக்கு படிப்பில் ஈடுபாடு உண்டாகும். பயணத்தில் மிதவேகம் நல்லது. சமூகப் பணிகளில் தற்பெருமையான பேச்சுக்களை தவிர்க்கவும். விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும்.

துலாம்

உடன்பிறந்தவர்களால் அலைச்சல் ஏற்படும். மனதில் இருக்கும் எண்ணங்களை செயல் வடிவில் மாற்றுவீர்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் சாதகமாகும். இழுபறியாக இருந்துவந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள்.

விருச்சிகம்

பழைய பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். குடும்பத்தினர்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். உயர்நிலை கல்வியில் சாதகமான சூழல் அமையும். எதிர்பாராத சில தனவரவுகளின் மூலம் மேன்மை ஏற்படும்.

தனுசு

எதிலும் பொறுமையை கடைபிடிப்பது நல்லது. மனதில் புதுவிதமான ஆராய்ச்சி சார்ந்த சிந்தனை உண்டாகும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். அலுவலகப் பணிகளில் மற்றவரை எதிர்பார்க்காமல் இருப்பது நல்லது. உடன்பிறந்தவர்கள் பற்றிய கவலை அதிகரிக்கும்.

மகரம்

தந்தை வழி உறவினர்களால் அலைச்சலும், அனுகூலமும் உண்டாகும். வாழ்க்கைத் துணைவருடன் அனுசரித்துச் செல்லவும். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாகும். வழக்கு சார்ந்த செயல்பாடுகளில் பொறுமை வேண்டும்.

கும்பம்

செயல்பாடுகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு பிறக்கும். உயர்வு நிறைந்த நாள்.

மீனம்

நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். வீடு பராமரிப்பு தொடர்பான பணிகள் நிறைவேறும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்