Today Rasipalan (27.04.2024): மேஷம் முதல் மீனம் வரை லாபம் யாருக்கு?.. இன்றைய ராசி பலன்கள் இதோ!
Today Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்று (ஏப்ரல் 27) வேலை, தொழில், வருமானம், உடல்நலம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 27 ஆம் தேதியான இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். தேவையில்லாத பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. ஈஸியாக முடிய வேண்டிய சில பணிகள் தாமதமாகி நிறைவேறும். கடன் தொடர்பான விஷயத்தில் நிதானம் தேவை. வியாபாரப் பணிகளில் மந்தமான போக்கு காணப்படும்.
ரிஷபம்
புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். சமூகப் பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரம் தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். உத்தியோகப் பணிகளில் புதிய பொறுப்பு கிடைக்கும்.
மிதுனம்
உத்தியோகப் பணிகளில் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். வியாபாரப் பணிகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகமான பலன் உண்டாகும். சமூகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.
கடகம்
சகோதரர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள் வெளியூர் வர்த்தகப் பணிகளில் ஆதாயம் மேம்படும். மனதில் உபரி வருமானம் குறித்த சிந்தனை மேம்படும். கலை சார்ந்த துறைகளில் மதிப்பு அதிகரிக்கும்.
சிம்மம்
சொத்து வாங்குவது குறித்த சிந்தனை அதிகரிக்கும். விவசாயப் பணிகளில் மேன்மை ஏற்படும். மனதளவில் புதுவிதமான தெளிவு ஏற்படும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். திடீர் செலவுகளால் சேமிப்பு குறையும். முயற்சி மேம்படும் நாள்.
கன்னி
கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய தொழில் நுட்ப கருவிகள் மீதான ஈடுபாடு அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும். நண்பர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள்.
துலாம்
குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பாராத பயணங்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். நெருக்கமானவர்களின் உதவி கிடைக்கும். கனிவான பேச்சுக்களால் நன்மை உண்டாகும்.
விருச்சிகம்
சில விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும். குழந்தைகள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். எதிர்கால சேமிப்பு பற்றிய சிந்தனை மேம்படும். பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களில் அதிக நேரம் செலவிடுவதை தவிர்க்கவும். உத்தியோகப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும்.
தனுசு
வெளியூர் பயணத்தால் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். உறவினர்கள் ஆதரவாக இருப்பவர்கள். கல்வியில் புதுமையான வாய்ப்பு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு விவாதம் தோன்றி மறையும். ஜாமீன் சார்ந்த விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும்.
மகரம்
கடன்கள் தீர ஆலோசனை கிடைக்கும். அனுபவ அறிவால் சில முடிவுகளை எடுப்பீர்கள். மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை ஏற்படும். வியாபார ரீதியான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். தாய்மாமனிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
கும்பம்
உத்தியோகப் பணிகளில் உயர்வான சூழல் ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். வர்த்தகம் தொடர்பான பயணம் மேம்படும். வருமானத்தை உயர்த்துவது தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.
மீனம்
உறவினர்களின் வழியில் மதிப்பு ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான சில விரயங்கள் ஏற்படும். உயர் அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயணங்கள் சாதகமாகும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்