தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  தென்னாங்கூர் ஸ்ரீ பாண்டுரங்கர் கோயில் தல வரலாறு!

தென்னாங்கூர் ஸ்ரீ பாண்டுரங்கர் கோயில் தல வரலாறு!

Suriyakumar Jayabalan HT Tamil
May 31, 2022 08:52 PM IST

தென்னாங்கூர் ஸ்ரீ பாண்டுரங்கர் கோயில் தல வரலாறு குறித்து இங்கே காண்போம்.

தென்னாங்கூர் ஸ்ரீ பாண்டுரங்கர் கோயில்
தென்னாங்கூர் ஸ்ரீ பாண்டுரங்கர் கோயில்

தல வரலாறு

ஆதிசங்கரர் ஸ்தாபித்த ஜோதிர் மடத்தின் பீடாதிபதி, ஸ்ரீ சிவ ரத்தினகிரி சங்கராச்சாரிய சுவாமிகள் இடம் சன்னியாச தீட்சை பெற்ற ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமிகளின் கனவில் தோன்றியுள்ளார் பாண்டுரங்கன்.

அப்போது அவர், தென்னாங்கூரில் தனக்கு ஒரு ஆலயம் அமைக்கும் படி உத்தரவிட்டதாகவும் அதன் காரணமாகவே இந்த தளத்தில் பாண்டுரங்கன் கோயில் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

மண்டபம் முழுவதும் கோகுலக் கண்ணனின் லீலைகளைச் சித்தரிக்கும் வண்ண ஓவியங்களும், சிற்பங்களும் காணப்படும். மண்டபத்தின் விதானத்தில் கிருஷ்ணரின் ராசலீலை சித்தரிக்கும் காட்சிகள் பல வண்ண ஓவியமாக வரையப்பட்டிருக்கும்.

கிருஷ்ணனுக்கு மதன மோகனன் என்ற திருப்பெயரும் உண்டு. மன்மதனையே தன்பால் மோகம் கொள்ளச் செய்தல் அதன் மூலம் தன்னை சரண் அடைந்த பக்தர்களை மோகத் தீயிலிருந்து விடுவிப்பவன் என்பதாலேயே கண்ணனுக்கு இந்த பெயர் ஏற்பட்டது. அதற்காக அவர் நடத்திய லீலைகள் தான் ராச லீலைகள்.

கருவறைக்கு முன்பு பக்தர்கள் அனைவரையும் அமர வைத்த தரிசிக்கச் செய்கிறார்கள். சன்னிதிகள் பாண்டுரங்கன் இடுப்பில் இரண்டு கைகளை வைத்தபடி செங்கல் மீது நின்ற கோலத்தில் ராஜஸ்தான் பாணியில் பட்டு பீதாம்பரமும், தலைப்பாகையும் அணிந்து கொண்டு, ரகுமாயி தேவியுடன் காட்சி அருள்கிறார்.

அவருக்கு வலப்புறத்தில் பாண்டுரங்கன் ரகுமாயி உற்சவ விக்ரகமும், இடப்புறம் ஸ்ரீதேவி பூதேவி சமேத பெருமாளின் உற்சவ விக்ரகங்களும் உள்ளன. பாண்டுரங்கன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் காட்சி தருவார் என்கிறார்கள் பக்தர்கள்.

முன்னொரு காலத்தில் விட்டலன் என்பவர் பெற்றோரிடம் கொண்டிருந்த பக்தியின் சிறப்பை உலகுக்கு உணர்த்தத் திருவுள்ளம் கொண்ட பாண்டுரங்கன். அவரை நாடிச் சென்றதும் பெற்றோர் சேவையில் ஈடுபட்டிருந்த விட்டலன், தான் பெற்றோருக்குச் செய்யும் சேவை நிறைவடையும் வரை காத்திருக்கச் சொல்லிக் கூறியுள்ளார்.

பின்னர் பாண்டுரங்கன் நிற்பதற்கு ஒரு செங்கல்லை எறிய அதற்குக் கட்டுப்பட்டு பாண்டுரங்கன் நின்றுள்ளார். அன்றைக்கு விட்டலன் வீசி எறிந்த செங்கல் மீது நின்று கொண்டிருந்த பண்டரிபுரத்து பாண்டுரங்கன் அதே கோலத்தில் இன்றைக்கும் பண்டரிபுரத்திலும், தென்னாங்கூரிலும் காட்சி அருள்கிறார்.

WhatsApp channel