தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பான சிவராத்திரி: அறநிலையத்துறை உத்தரவு!

அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பான சிவராத்திரி: அறநிலையத்துறை உத்தரவு!

HT Tamil Desk HT Tamil
Feb 16, 2023 12:16 PM IST

Mahashivratri 2023: அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவு போட்டுள்ளார்.

சிவபெருமான்  -கோப்புபடம்
சிவபெருமான் -கோப்புபடம்

சிவ பெருமானின் பெருமையை பறைசாற்றும் விதமாக வரும் 18 ஆம் தேதி சிவராத்திரி விழாவை சிறப்பாக நடத்த இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது.  இது  தொடர்பாக அத்துறை வெளியிட்டுள்ள உத்தரவில்,

‘‘சிவ வழிபாடு செய்ய வரும் பக்தர்களின் மனம் மகிழும் படி பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள், ஆன்மீக நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்.

பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யும் வகையில் உரிய வசதிகள், மருத்துவ முகாம்கள், கழிப்பறைகள், காவல்துறை பாதுகாப்பு முறையாக அளிக்கப்பட வேண்டும்.

கலைநிகழ்ச்சிகளுக்கு கலைஞர்களை தேர்வு செய்யும்போது அந்தந்த பகுதி கலைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்,’’

என்று அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவு போட்டுள்ளார். 

சிவராத்திரி விழாக்கள் இந்தியா முழுதும் சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில் தனியார் அமைப்புகளும், தனிநபர்களும் தங்கள் பகுதியில் சிவராத்திரி விழாவை சிறப்பாக கொண்டாட தீவிர ஏற்பாடுகளை செய்தி வருகின்றனர். 

இந்நிலையில் அரசு தரப்பில் அனைத்து சிவாலயங்களிலும் சிவராத்திரி விழாவை சிறப்பாக கொண்டாட அறிவுறுத்தியிருப்பதால் சிவ பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

WhatsApp channel

டாபிக்ஸ்