தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  மாங்காடு காமாட்சி அம்மன் கோயில்!

மாங்காடு காமாட்சி அம்மன் கோயில்!

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 17, 2022 02:07 AM IST

மாங்காடு காமாட்சி அம்மன் கோயில் சிறப்புகள் குறித்து இங்கே காண்போம்.

மாங்காடு காமாட்சி அம்மன் கோயில்
மாங்காடு காமாட்சி அம்மன் கோயில்

பக்தியின் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டதாக நடக்கின்றன இந்த பிரார்த்தனைகள். சென்னையில் அடுத்த மாங்காட்டில் தனது நடுவில் தவறாக நிற்கும் காமாட்சி ஆலயத்தில் இந்த பிரார்த்தனைகள் நடக்கின்றன.

இவை அன்னையின் அருளால் கருத்தரித்த பெண்ணுக்கு வளைகாப்பு நடத்தி ஆனந்தப் படுகிறார்கள் பக்தர்கள். அந்தப் பலனை உணர்ந்தவர்கள் விவரிக்கும்போது காமாட்சியின் கருணை வெள்ளம் கண்களை மறைக்கிறது. திருமணம் கைகூட வேண்டி மஞ்சள் முடிந்த மாங்கல்ய கயிறுகளைக் கட்டுகிறார்கள் பக்தர்கள்.

கடும் தவத்தால் கயிலைநாதனை மணந்த காமாட்சி, தங்கள் கல்யாணமும் கைகூடச் செய்வாள் என்ற அழுத்தமாக நம்பிக்கையின் பக்தர்கள் பிரார்த்தனை செய்கின்றனர்.

மஞ்சள் கயிறுகள் தேவியின் திருவடிகளைச் சரண் அடைந்தால் தடைகளும் நீங்கும் எப்பேர்ப்பட்ட கதவுகளும் திறக்கும் என்று உணர்கின்றனர் பக்தர்கள்.

இன்னொருபுறம் தொட்டில்கள் அசைந்து கொண்டிருக்கின்றன. இல்லறத்தில் இனிமை என்பது மழலைச் செல்வம் இல்லாவிட்டால் இனிக்குமா குறைவில்லாத பெருஞ்செல்வம் என்பதும் அதிலிருந்து தான் ஆரம்பிக்கிறது. அந்த மழலைச் செல்வத்தையும் அளிக்கும் அன்னை காமாட்சி.

மேலும் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள் அம்பிகை. இந்த அர்த்த மேரு ஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்பட்டது. அ மனத்தை, எண்ணங்களை, பேச்சை, செயலை ஒளி மிக்கதாக இனிமையானதாக மாற்றிக் கொள்ளுங்கள் என்று உணர்த்துகிறார் அம்பிகை. இந்த தேவியிடம் நம்முடைய பிரார்த்தனைகளை வணங்கினால் அனைத்தும் நிறைவேறும் என்பது ஐதீகம்.

WhatsApp channel