தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Tamil New Year: சிக்கிய தனுசு ராசி.. தமிழ் புத்தாண்டு உங்களுக்கு அடி உறுதி.. தப்பிக்க வழி இருக்கா?.. வாங்க பார்க்கலாம்!

Tamil New Year: சிக்கிய தனுசு ராசி.. தமிழ் புத்தாண்டு உங்களுக்கு அடி உறுதி.. தப்பிக்க வழி இருக்கா?.. வாங்க பார்க்கலாம்!

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 13, 2024 12:28 PM IST

தனுசு ராசியை பொறுத்த வரை இந்த தமிழ் புத்தாண்டு உங்களுக்கு பல்வேறு விதமான சிரமங்களை கொடுக்க வாய்ப்பு உள்ளது. தொழிலில் வெற்றி கிடைத்தாலும் லாபம் கிடைத்தாலும் அதிக செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

தமிழ் புத்தாண்டு 2024
தமிழ் புத்தாண்டு 2024

இந்த தமிழ் புத்தாண்டு 12 ராசிகளுக்கும் கலவையான பலன்கள் கிடைக்கப் போகின்றது. குரோதி தமிழ் புத்தாண்டு திருநாளில் என்னென்ன பலன்கள் தனுசு ராசிக்கு கிடைக்கப் போகின்றது என்பது குறித்து இங்கு காணலாம்.

தனுசு ராசியை பொறுத்த வரை இந்த தமிழ் புத்தாண்டு உங்களுக்கு பல்வேறு விதமான சிரமங்களை கொடுக்க வாய்ப்பு உள்ளது. தொழிலில் வெற்றி கிடைத்தாலும் லாபம் கிடைத்தாலும் அதிக செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. உங்கள் குடும்ப வாழ்க்கை மற்றும் திருமண வாழ்க்கை நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். இருப்பினும் சங்கடங்கள் அதிகம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

தொழில் மற்றும் வேலை

 

வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் இருந்தாலும் மற்றவர்களால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. புதிதாக தொழில் மற்றும் வியாபாரம் ஆரம்பிக்க வேண்டும். என்றால் இது உங்களுக்கு ஏற்ற காலமாக இருக்காது. எனவே சற்று தாமதமாக ஆரம்பம் செய்வது நல்லது. வியாபாரத்தையும் நீங்கள் தொடர்வது உங்களுக்கு நன்மைகளை அதிகமாக கொடுக்கும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு மன கவலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. மற்றவர்களை நம்பாமல் பயணம் செய்வது நல்லது. சிலருக்கு வேலை செய்யும் இடத்தில் இடமாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அதனால் உங்களுக்கு சிரமங்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

பொதுவாக கிடைக்கும் பலன்கள்

 

தனுசு ராசி பொருத்தவரை இந்த தமிழ் புத்தாண்டு உங்களுக்கு கஷ்டங்கள் மற்றும் சங்கடங்கள் நிறைந்ததாக இருப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது தேவையில்லாத செலவுகள் ஏற்படக்கூடும். வீண் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. புதிய முயற்சிகளின் நஷ்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எடுத்த காரியங்களை முடிப்பதற்கு சற்று தாமதமாகும். வீண் அலைச்சல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கூடுதல் கவனம் செலுத்தும் உங்கள் உடலை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தேவையில்லாத சிக்கல்களில் ஈடுபடுவது நல்லது. கிடையாது இந்த புத்தாண்டு பொறுத்தவரை உங்களுக்கு மிகவும் சங்கடமான ஆண்டாக அமைந்துள்ளது சில சிரமங்கள் உங்களைத் தேடி வரும்.

மாணவர்கள் கல்வியின் சிறந்து விளங்குவார்கள் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். மேல் படிப்பிற்காக மாணவர்கள் உங்கள் எல்லையை விட்டு நகர்ந்து செல்ல அதிக வாய்ப்பு உள்ளது. இருப்பினும் கூடுதல் கவனம் செலுத்தி உங்கள் கல்வியை முன்னேற்றம் அடையச் செய்வது உங்களுடைய கையில் உள்ளது. உங்கள் கல்விக்கு நேரம் ஒதுக்கி நீங்கள் முன்னேற்றம் அடைய வேண்டும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel