HT Yatra: தசரதன் தோஷம் நீங்கிய தலம்.. வில்வ வனநாதரை வழிபட்ட ராமபிரான்.. உக்கிரமாக நித்திய கல்யாணி
HT Yatra: ஒவ்வொரு கோயிலும் தனித்துவமான கலைநயத்தோடு எழில் மிகுந்து காட்சி கொடுத்து வருகின்றன. அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் திருநெல்வேலி மாவட்டம் கடையம் அருள்மிகு வில்வவனநாதர் திருக்கோயில்.

HT Yatra: உலகம் முழுவதும் மிகப்பெரிய கூட்டத்தை தனது வாசம் வைத்திருக்கக் கூடியவர் சிவபெருமான். கடவுள்களுக்கெல்லாம் கடவுளாக சிவபெருமான் விளங்கி வருகின்றார். மன்னர்கள் காலம் தொடங்கி இன்று வரை சிவபெருமானுக்கு மிகப்பெரிய பக்தர்கள் கூட்டம் இருந்த வருகிறது.
மிகப்பெரிய சோழனாக விளங்கிய ராஜராஜ சோழன் கட்டி வைத்த தஞ்சை பெருவுடையார் திருக்கோயில் இன்று வரை கம்பீரமாக நின்று வருகிறது ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் கலைநயம் குறையாமல் அந்த கோயில் சரித்திர குறியீடாக விளங்கி வருகின்றது.
நிலங்களுக்காக எத்தனையோ மன்னர்கள் போரிட்டு வந்தாலும் அனைத்து மன்னர்களுக்கும் குலதெய்வமாக சிவபெருமான் விளங்கி வந்துள்ளார். எத்தனையோ கோயில்களில் தமிழ்நாட்டில் திரும்பும் திசையெல்லாம் அனைத்து மன்னர்களும் கட்டிவைத்துச் சென்றுள்ளனர்.
இன்று வரை அந்த கோயில்களில் பூஜைகள் நடத்தப்பட்டு வழிபாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு கோயிலும் தனித்துவமான கலைநயத்தோடு எழில் மிகுந்து காட்சி கொடுத்து வருகின்றன. அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் திருநெல்வேலி மாவட்டம் கடையம் அருள்மிகு வில்வவனநாதர் திருக்கோயில்.
தல சிறப்பு
தமிழ் மொழியின் மிகப்பெரிய புலவராக திகழ்ந்து வந்த பாரதியார் இந்த ஊரில் பெண்ணெடுத்து திருமணம் செய்து மருமகன் ஆனார். சில ஆண்டுகள் இந்த ஊரில் தங்கி இருந்தார் பாரதியார். அப்போது இங்கு இருந்த கூடிய வில்வ வனநாதர் திருக்கோவிலுக்கு சென்று வழிபாடு செய்துள்ளார்.
இங்கே இருந்த தாயார் நித்திய கல்யாணிக்கு மிகப்பெரிய பக்தராக பாரதியார் விளங்கி வந்துள்ளார். தமது கவிதைகளில் நித்திய கல்யாணி அம்மனின் வர்ணித்து எழுதியுள்ளார் பாரதியார்.
இங்கு காட்சி கொடுக்கக்கூடிய தாயார் நித்தியகல்யாணி உக்கிர தேவதையாக விளங்கி வருகிறார். இங்கு இருக்கும் தாயார் கிழக்கு நோக்கி காட்சி கொடுத்து வந்துள்ளார். எந்த பூஜைகள் செய்தாலும் உக்கிரம் தனியாமல் இருந்த நித்திய கல்யாணி தாயாரை தெற்கு நோக்கி இருந்த சன்னதியில் வைத்துள்ளனர். அதற்குப் பிறகு சாந்த தேவியாக அம்பாள் காட்சி கொடுத்துள்ளார்.
தல வரலாறு
அசுரர்களை அழிப்பதற்காக தேவேந்திரனுக்கு தசரத மகாராஜா உறுதுணையாக இருந்து கொண்டுள்ளார். அசுரர்களை கொன்று குவித்த தசரத மகாராஜாவிற்கு தோஷம் ஏற்பட்டுள்ளது. இந்த தோஷத்தை கழிப்பதற்காக தென்பகுதியை நோக்கி வந்துள்ளார். அப்போது அகத்தியரால் உருவாக்கப்பட்ட தத்துவ சாரார் நதியில் நீராடி தனது தோஷத்தை நீக்கிக்கொண்டார் தசரத மகாராஜா.
அப்போது அந்த நதி கரையில் சுயம்புவாக வில்வ வனநாதர் எழுந்தருளியுள்ளார். அங்கு இருந்த சிவபெருமானை தசரதன் வழிபாடு செய்துள்ளார். உனக்கு மகாவிஷ்ணு மகனாக பிறப்பார் என சிவபெருமான் அருளியுள்ளார்.
அயோத்தியில் ராமராஜ்ஜியம் உருவானது. அந்த காலத்தில் அங்கு எந்த அகால மரணமும் ஏற்படாமல் இருந்து வந்துள்ளது. இதுகுறித்து பொறாமை கொண்ட சம்புகன் என்பவர், ராம ராஜ்ஜியத்தில் அகால மரணம் ஏற்பட வேண்டும் என இறைவனின் நோக்கி தவம் செய்துள்ளார்.
அதற்குப் பிறகு அவரை ராமபிரான் வதம் செய்தார். தனது தோஷத்தை நீக்கிக் கொள்வதற்காக தத்துவ சாரார் நதியில் வந்து நீராடி சுயம்புவாக எழுந்தருளியுள்ள வில்வ வனநாதரை வழிபட்டு சென்றுள்ளார். ராமபிரான் நீராடிய காரணத்தினால் அது ராமநதி என அழைக்கப்பட்டது. இப்போது கூட இந்த நதி இதே பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
