Friday Temple: கனவில் தோன்றிய சிவபெருமான்.. வழிகாட்டியே எறும்பு கூட்டம்.. சுயம்புவாக எழுந்த காசி விஸ்வநாதர்
Kasi Viswanathar: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் விஸ்வநாதன் எனவும் தாயார் உலகமமன் எனவும் திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.
Kasi Viswanathar: உலகம் முழுவதும் சிவபெருமான் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை தன்வசம் வைத்திருக்கிறார். உலகம் முழுவதும் கோயில் கொண்டு சிவபெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். எங்கு திரும்பினாலும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்ட வருகின்றன.
குறிப்பாக இந்தியாவில் திரும்பவும் திசையெல்லாம் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்ட வருகின்றன. மனிதர்கள் தோன்றுவதற்கு முன்பாகவே உயிரினங்களால் வணங்கப்பட்ட கடவுளாக சிவபெருமான் விளங்கி வருகின்றார்.
குறிப்பாக தமிழ்நாட்டின் சிவபெருமானை குலதெய்வமாக வணங்கி கொண்டுள்ளனர். மன்னர்கள் காலம் தொட்டு இன்று வரை சிவபெருமான் ஆகச் சிறந்த கடவுளாக திகழ்ந்த வருகின்றார். மண்ணுக்காக மன்னர்கள் போரிட்டு வந்தாலும் ஒருபுறம் தங்களது பக்தியை வெளிப்படுத்துவதற்காகவே அவர்களின் குலதெய்வமாக விளங்கிய சிவபெருமானுக்கு மிகப்பெரிய பிரமாண்ட கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர். பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்று வரை அசைக்க முடியாத வரலாற்று சரித்திர குறியீடாக அந்த கோயில்கள் திகழ்ந்து வருகின்றன.
அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் விஸ்வநாதன் எனவும் தாயார் உலகமமன் எனவும் திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.
தல சிறப்பு
சிவபெருமான் இங்கு சுயம்பு மூர்த்தியாக அருள் பாலித்து வருகின்றார் இந்த கோயிலில் இருக்கக்கூடிய இறைவனை வழிபட்டால் வடக்கு பக்கம் இருக்கக்கூடிய காசு இறைவனை வணங்கியதற்கு இணையான புண்ணியம் கிடைக்கும் என கூறப்படுகிறது.
இந்த கோயிலில் இருக்கக்கூடிய மூலவரான காசி விஸ்வநாதரை குறைந்தது ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருந்து பார்க்க முடியும் என கூறப்படுகிறது. அந்த அளவிற்கு விசாலமான சன்னதி சுவாமிக்கு அமைக்கப்பட்டுள்ளது. மற்ற கோவில்களோடு ஒப்பிடுகையில் இந்த கோயிலில் இருக்கக்கூடிய துர்க்கை அம்மன் மேற்கு நோக்கி அருள் பாலித்து வருகின்றார்.
தல வரலாறு
பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியை பராக்கிரம பாண்டிய மன்னன் ஒருவர் ஆண்டு வந்தார். அவர் மிகப்பெரிய சிவபெருமான் பக்தராக திகழ்ந்து வந்தார். எப்பொழுதும் காசிக்குச் சென்று சிவபெருமானை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
ஒரு நாள் திடீரென மன்னன் கனவில் சிவபெருமான் தோன்றினார். வடக்கே இருக்கக்கூடிய காசிக்குச் சென்று என்னை வழிபடுவதற்கு பதிலாக இந்த இடத்திலேயே தென்காசி பகுதியில் கோயில் அமைத்து தன்னை வழிபடும்படி சிவபெருமான் கூறினார்.
மேலும் எறும்புகள் ஊர்ந்து செல்லும் வழியாக சென்று பார்த்தால் அங்கு கோயில் கட்டும் இடம் தெரியும் என கூறியுள்ளார். திடீரென்று எழுந்த மன்னன் தன் இடத்திலிருந்து எறும்புகள் ஊர்ந்து சென்ற வழியே பின்தொடர்ந்து சென்றார். அந்த எறும்புகளின் கூட்டம் அங்கே இருக்கக்கூடிய சிற்றாற்றங்கரையில் செண்பக வனத்திற்கு சென்று சேர்ந்தது. அந்த இடத்தில் புற்றுப் பகுதியில் சிவபெருமான் சுயம்புலிங்கமாக காட்சி கொடுத்தார். உடனே மன்னர் அந்த இடத்தில் கோயில் கட்டி வழிபாட்டை தொடங்கினார்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்