அதிர்ச்சியில் ஆழ்ந்த மன்னன்.. திருவிளையாடல் செய்த சிவபெருமான்.. லிங்கமாக காட்சி கொடுத்த வீரசேகரர்!
Veerasekarar: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை அருள்மிகு வீரசேகரர் திருக்கோயில். இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் வீரசேகரர் எனவும் தாயார் உமையாம்பிகை என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.
Veerasekarar: உலகம் முழுவதும் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை தன் வசம் வைத்திருக்க கூடியவர் சிவபெருமான். எங்கு திரும்பினாலும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக இந்தியாவில் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டம் சிவபெருமானுக்கு இருந்து வருகிறது. திரும்பும் திசையெல்லாம் கோயில்கள் அமைக்கப்பட்டு இன்றுவரை வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
குறிப்பாக தமிழ்நாட்டில் மன்னர்கள் காலம் தொடங்கி இன்று வரை சிவபெருமானுக்கு மிகப்பெரிய கோயில்கள் கட்டப்பட்டு வருகின்றன. மண்ணுக்காக மன்னர்கள் ஒருபுறம் போரிட்டு வந்தாலும் தங்களது கலை நயம் மற்றும் சிவபெருமான் மீது கொண்ட பக்தியை வெளிப்படுத்துவதற்காகவே வானம் உயர்ந்த கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர்.
பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் அந்த கோயில்கள் இன்று வரை கம்பீரமாக நின்று வருகின்றன. சில கோயில்கள் எந்த காலகட்டத்தில் கட்டப்பட்டது என்பது கூட இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. பல மன்னர்கள் எதிரிகளாக இருந்தாலும் அவர்கள் சிவபெருமானை குலதெய்வமாக வணங்கி வந்துள்ளனர்.
அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை அருள்மிகு வீரசேகரர் திருக்கோயில். இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் வீரசேகரர் எனவும் தாயார் உமையாம்பிகை என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.
தல சிறப்பு
இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் சுயம்புலிங்கமாக அருள்பாலித்து வருகிறார். இந்த கோயிலில் வீழ்ச்சி இருக்கக்கூடிய சிவபெருமானுக்கு புழுங்கல் அரிசி சாதம் நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய விநாயகர் பெருமான் விக்ரம விஜய விநாயகர் என்ற திருநாமத்தோடு அழைக்கப்படுகின்றார்.
இறைவன் வீரசேகரரும், தாயார் உமையாம்பிகையும் தனித்தனி சன்னதிகளில் காட்சி கொடுத்த வருகின்றனர். இங்கு வீட்டில் இருக்கக்கூடிய பைரவர் இரண்டு நாய்களுடன் காட்சி கொடுத்து வருகிறார்.
ஒருமுறை இங்கு வந்த பாண்டிய மன்னர் சிவபெருமானின் சக்தி புரியாமல் அவர் மீது சந்தேகம் கொண்டார். இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சுவாமியை முதல் முறை வலம் வந்த பொழுது அங்கு இருந்த வீரரை மரம் பலா மரமாக மாறி உள்ளது. உடனே சிவபெருமானை நோக்கி சென்று பாண்டிய மன்னன் மன்னிப்பு கேட்டார்.
சிவபெருமான் அந்த மரத்திலிருந்து நீ கனியை சாப்பிட்டால் உனக்கு ஏற்பட்டு இருந்த நோய்கள் அனைத்தும் தீரும் என கூறினார். உடனே மன்னன் அந்த பழத்தை சாப்பிட்டு தனது நோயை நீக்கி கொண்டார் உடனே அந்த பலாமரம் வீர மரமாக மாறியது. இங்கு வீட்டிற்கு கூடிய மரத்தை வழிபட்டால் நுழைத்த காரியம் நிறைவேறும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.
மதுரையை ஆட்சி செய்து வந்த பாண்டிய மன்னரிடம் மாணிக்கவாசகர் பணியாற்றி வந்தார். ஒருமுறை மாணிக்கவாசகர் குதிரைகள் வாங்க சென்ற பொழுது அந்த வழியே கோயில் கொண்டு இருந்த சிவபெருமானுக்கு தான் வைத்திருந்த புழுங்கல் அரிசியில் சமையல் செய்து நைவேத்தியமாக படைத்தார். அன்று முதல் சிவபெருமானுக்கு இங்கு புழுங்கல் அரிசி சமர்ப்பிக்கப்படுகிறது.
தல வரலாறு
இந்த பகுதி முழுவதும் முன்பு ஒரு காலத்தில் வனமாக இருந்து வந்தது. இங்கு வேடுவன் ஒருவர் வாழ்ந்து வந்தார். ஒரு மரத்திற்கு அடியில் சர்க்கரைவள்ளி கிழங்கு கொடியை கடப்பாறை கொண்டு தேடினார் அந்த வேடுவன். அப்போது அந்த இடத்திலிருந்து திடீரென ரத்தம் பீறிட்டு வந்தது.
கடப்பாரையால் குத்தி ரத்தம் வந்ததால் வேடுவன் அதிர்ந்து போனார். உடனே அந்த இடத்தை தோண்டி பார்க்கும்பொழுது அங்கு லிங்கம் இருந்தது. உடனே அதிர்ந்து போன வீடுகள் குஷ்ட நோயால் பாதிக்கப்பட்டிருந்த மன்னரிடம் சென்று கூறினார்.
உடனே மன்னர் அங்கு சென்று லிங்கத்தை எடுத்து சிவபெருமானுக்கு கோயில் ஒன்றை கட்டினார். மன்னனின் குஷ்ட நோய் நிவர்த்தி அடைந்தது.