சடுகுடு ஆடப்போகும் சனிபகவான்.. உச்சக்கட்ட உக்கிரநிலை.. புத்தாண்டில் சாஷ ராஜ யோகம் பெறப்போகும் ராசிகள் யார் யார்?
இதனால், மக்கள் வாழ்வில் பல பிரச்சினைகள் நீங்கும். இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை சனி தனது ராசியை மாற்றுவார். தற்போது சனி பகவான் கும்ப ராசியில் இருக்கிறார். 2025 -ல் சனி பகவான் தன்னுடைய ராசியை மாற்ற இருக்கிறார். - சனி பெயர்ச்சி பலன்கள்
(1 / 5)
சனி பகவான் கடந்த இரண்டு மாதங்களாக கும்ப ராசியில் சஞ்சரித்து வருகிறார். தற்போது தீபாவளி முடிந்திருக்கும் நிலையில் அவரின் போக்கு மாற இருக்கிறது.
(2 / 5)
பொதுவாக ஜோதிடத்தில், சனியின் இருப்பு மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. சனி பகவான் நேரடியாக வரும் பட்சத்தில், அது எதிர் திசையில் செல்வதை நிறுத்துகிறது. இதனால், மக்கள் வாழ்வில் பல பிரச்சினைகள் நீங்கும். இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை சனி தனது ராசியை மாற்றுவார். தற்போது சனி பகவான் கும்ப ராசியில் இருக்கிறார். 2025 -ல் சனி பகவான் தன்னுடைய ராசியை மாற்ற இருக்கிறார். நவம்பர் 15 முதல் சனிபகவான் நேரடியாக நகரத் தொடங்குகிறார். பஞ்சமஹா புருஷ ராஜ யோகங்களில் ஒன்றான சாஷ ராஜ யோகத்தை, ஆண்டு முழுவதும் சனி பகவான் கொடுக்க இருக்கிறார். இதன் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு இன்னும் இரண்டு மாதங்களுக்கு நல்ல பலன்கள் கிட்ட வாய்ப்பு இருக்கிறது. அவர்கள் எந்த ராசிக்காரர்கள் என்பதை பார்க்கலாம்.
(3 / 5)
கடகம்தீபாவளிக்கு பின் வரும் காலம் நன்றாக இருக்கும். உங்கள் வாழ்க்கையில் நீண்ட காலமாக நடந்து வந்த குழப்பம் குறையத்தொடங்கும். சனி பகவானின் ஆசீர்வாதம் கிடைக்க இருப்பதால், உங்களுக்கு நல்ல பலன்கள் வந்து சேரும். எனவே நீங்கள் மன அழுத்தத்திலிருந்து நிவாரணம் பெறுவீர்கள்.
(4 / 5)
மீனம்தீபாவளிக்கு பிறகு வரும் நேரம் அற்புதமாக இருக்கும். இக்கட்டான சூழ்நிலைகளில் இருந்து நிவாரணம் பெறுவீர்கள். சில புதிய ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் காதல் வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கையில் கவனம் செலுத்த வேண்டும். புதிதாக விஷயங்களைத் தொடங்க முயற்சிக்க வேண்டும். வியாபாரம் செய்ய சாதகமான சூழ்நிலை அமையும்.
(5 / 5)
மகரம் தனுசுசனி பகவான் மீன ராசியில் நுழையும் போது, மகர ராசியில் சனியின் தாக்கம் நீங்கும். ஆகையால், இனிமேல் இது உங்களுக்கு நல்ல நேரமாக இருக்கும். இந்த நேரத்தில் அனைவரிடமும் நல்ல அணுகுமுறையைக் கொண்டிருங்கள். வீண் விஷயங்களில் தலையிட வேண்டாம். காதல் வாழ்க்கையில் உங்கள் முயற்சிகளை முன்னெடுத்துச் செல்லுங்கள். அப்போதுதான் உங்கள் காதல் வாழ்க்கை வெற்றிகரமாக இருக்கும்.
மற்ற கேலரிக்கள்