தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  புதன் சூரணாக மாறினார்.. பணமழை கொட்டும் ராசிகள்.. ஜாக்பாட் அடிக்கப்போகுது.. அதிர்ஷ்ட ராசிகள் இவர்கள்தான்

புதன் சூரணாக மாறினார்.. பணமழை கொட்டும் ராசிகள்.. ஜாக்பாட் அடிக்கப்போகுது.. அதிர்ஷ்ட ராசிகள் இவர்கள்தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 28, 2024 11:05 AM IST

Lord Mercury: புதன் பகவான் கடந்த மார்ச் 15 ஆம் தேதியன்று மீன ராசியில் உதயமானார். இதே நாளில் செவ்வாய் பகவான் கும்ப ராசியில் நுழைந்தார். புதன் பகவானின் உதயமானது மிகவும் முக்கியமான செயலாக ஜோதிட சாஸ்திரம் கருதுகிறது. பொதுவாக உதவி நிலையில் கிரகங்களின் ஆற்றல் மிகவும் அதிகமாக இருக்கும்.

புதன் பெயர்ச்சி
புதன் பெயர்ச்சி

புதன் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். கிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் அஸ்தமனம், உதயம், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி உள்ளிட்டவைகள் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

புதன் பகவான் கடந்த மார்ச் 15 ஆம் தேதியன்று மீன ராசியில் உதயமானார். இதே நாளில் செவ்வாய் பகவான் கும்ப ராசியில் நுழைந்தார். புதன் பகவானின் உதயமானது மிகவும் முக்கியமான செயலாக ஜோதிட சாஸ்திரம் கருதுகிறது. பொதுவாக உதவி நிலையில் கிரகங்களின் ஆற்றல் மிகவும் அதிகமாக இருக்கும். அந்த வகையில் புதன் பகவானின் ஆசிர்வாதத்தை பெறுகின்ற ராசிகளை இங்கே காண்போம்.

மேஷ ராசி

 

புதன் பகவானின் உதயத்தால் மன அழுத்தத்திலிருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கக்கூடும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். புதிய வேலைவாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வேலைகள் முடிகளையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும்.

ரிஷப ராசி

 

புதன் பகவானின் உதயம் உங்களுக்கு பண வரவை அதிகப்படுத்தி கொடுக்கப் போகின்றது. புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். காதல் வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும். புதிய நண்பர்கள் உங்களுக்கு கிடைப்பார்கள். உங்களை சுற்றி அனுகூலமான பலன்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். அனைத்து சிக்கல்களுக்கும் இப்போது நிவர்த்தி கிடைக்கும்.

கன்னி ராசி

 

புதன் பகவானின் உதயம் உங்களுக்கு மேல் படிப்பிற்காக வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகளை உண்டாக்கும் நல்ல நேரமாக இது அமையும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணை முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். திருமண வாழ்க்கையில் அமைதி நிலவும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு மகிழ்ச்சியாக நடந்து கொள்வார்கள் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.

துலாம் ராசி

 

புதன் பகவானின் உதயம் உங்களுக்கு மகிழ்ச்சி மற்றும் நிம்மதியை கொடுக்கப் போகின்றது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்கும் வாய்ப்பு உங்களைத் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக நடந்து கொள்வார்கள். தடைபட்டு கடந்த காரியங்கள் அனைத்தும் உங்களுக்கு ஏற்றவாறு நடக்கும். வெற்றிகரமான காலமாக இது உங்களுக்கு அமையும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel