தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See The Zodiac Signs That Are Going To Experience Rajayoga By Lord Saturn

சனி பணமழை உறுதி.. அதிர்ஷ்டம் கொட்ட போகுது.. ராஜயோகத்தை அனுபவிக்கும் ராசிகள்.. யோகம் வந்துவிட்டது

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 29, 2024 09:52 AM IST

Lord Saturn: சனி பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். சனிபகவான் இந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் குருபகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகின்றார்.

சனி பெயர்ச்சி
சனி பெயர்ச்சி

கர்மநாயகனாக விளங்கக்கூடிய சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். சனி பகவான் 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்த வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். சனி பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

சனி பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். சனிபகவான் இந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் குருபகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகின்றார். சனிபகவானின் இந்த நட்சத்திர இடமாற்றமானது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் ராஜயோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

 

சனிபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்கின்ற இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வணிகத்தில் நல்ல லாபம் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மகர ராசி

 

சனிபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பணவரவு அதிகரித்துக் கொடுக்கப்படுகின்றது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பேச்சு திறமையால் நல்ல காரியங்கள் உங்களுக்கு நடக்கும். நீண்ட நாட்கள் ஆசிகள் உங்களுக்கு நிறைவேறும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு உண்டாகும்.

மேஷ ராசி

 

சனிபகவானின் நட்சத்திர பெயர்ச்சி உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கும் வருமானத்தில் உயர்வு கிடைக்கும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு உண்டாகும். பணம் சேமிப்பதற்கான சூழ்நிலைகள் உங்களுக்கு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பல வழிகளில் இருந்து உங்களுக்கு பண வரவு இருக்கும். பங்குச்சந்தையில் உங்களுடைய முதலீடுகள் நல்ல முன்னேற்றத்தை பெரும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வாய்ப்புகள் உங்களுக்கு உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel