தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  கஷ்டப்பட போகும் 3 ராசிகள்.. ஆபத்தோடு வரும் சுக்கிரன்.. முரட்டு அடி உறுதியானது.. தப்பிக்க முடியாது

கஷ்டப்பட போகும் 3 ராசிகள்.. ஆபத்தோடு வரும் சுக்கிரன்.. முரட்டு அடி உறுதியானது.. தப்பிக்க முடியாது

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 07, 2024 10:30 AM IST

Lord Venus: சுக்கிர பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. சனி பகவானின் சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வந்த சுக்கிரன் கடந்த மார்ச் 31ஆம் தேதி அன்று குரு பகவானின் மீன ராசியில் நுழைந்தார்.

சுக்கிர பெயர்ச்சி
சுக்கிர பெயர்ச்சி

சுக்கிர பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. சனி பகவானின் சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வந்த சுக்கிரன் கடந்த மார்ச் 31ஆம் தேதி அன்று குரு பகவானின் மீன ராசியில் நுழைந்தார்.

குரு பகவானின் மீன ராசியில் பயணம் செய்த சுக்கிரனின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். சுக்கிர பகவானின் இடமாற்றத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களை மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலைகள் உருவாக்கி உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

சிம்ம ராசி

 

உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வாழ்வில் பல்வேறு விதமான சிக்கல் கல்வி ஏற்படா அதிக வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் பல்வேறு விதமான ஏற்றத்தாழ்வுகள் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களோடு பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நெருக்கமான ஒருவரால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது எனவே கவனமாக இருங்கள். குடும்பத்தின் மற்றவர்களிடம் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும்.

துலாம் ராசி

 

உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சூழ்நிலைகளில் இருந்து அவமானங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. சிக்கல்கள் எப்போதும் உங்களைத் தேடி வரும். சூழ்நிலை அமைந்துள்ளது. வீண் பழிகள் நீங்கள் சுமக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பண இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எந்த காரியத்தை தொடங்கினாலும் அதிக முறை சிந்தித்து அதற்கு ஏற்றார் போல் நீங்கள் நடந்து கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

விருச்சிக ராசி

 

உங்கள் ராசிகள் ஐந்து வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு குடும்ப வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எடுத்த காரியங்கள் நடப்பதற்கு சற்று தாமதமாகவும் அனைத்திலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. குடும்ப உறுப்பினர்களோடு அதிக நேரத்தை செலவிட முயற்சி செய்வது நல்லது. குடும்பத்தினரால் நீங்கள் பல்வேறு விதமான சிக்கல்களை சந்திக்க நேரிடும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்தமான சூழ்நிலை உருவாகும் புதிய முயற்சிகளை தற்போது தவிர்ப்பது நல்லது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel