தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  மேஷத்தில் குறி.. குரு புதன் சேர்க்கை.. பணமழை கொட்டுது.. அதிர்ஷ்டசாலி ராசிகள் நீங்கள் தானா?

மேஷத்தில் குறி.. குரு புதன் சேர்க்கை.. பணமழை கொட்டுது.. அதிர்ஷ்டசாலி ராசிகள் நீங்கள் தானா?

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 10, 2024 10:53 AM IST

புதன் பகவான் கடந்த மார்ச் 26 ஆம் தேதி அன்று குரு பகவான் பயணம் செய்து வரும் மேஷ ராசியில் நுழைந்தார். இதனால் குரு புதன் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இவர்களுடைய சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது.

குரு பகவான்
குரு பகவான்

நவக்கிரகங்களில் இளைய கிரகமாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இளவரசன் ஆக விளங்கிவரும் புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர்.

புதன் பகவான் கடந்த மார்ச் 26 ஆம் தேதி அன்று குரு பகவான் பயணம் செய்து வரும் மேஷ ராசியில் நுழைந்தார். இதனால் குரு புதன் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இவர்களுடைய சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மகர ராசி

 

உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் குரு புதன் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் உங்களுக்கு பணவரவில் எந்த குறையும் இருக்காது ஆடம்பர வசதிகள் அதிகரிக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். பரம்பரை சொத்துக்களால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். புதிய முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை தேடி தரும் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கடக ராசி

 

உங்கள் ராசிகள் பத்தாவது வீட்டில் குரு புதன் சேர்க்கை நிகழ்கின்றது. இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களால் உங்களுக்கு முழு ஆதரவும் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக நடந்து கொள்வார்கள். விரும்பிய இடமாற்றம் சிலருக்கு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வராமல் இருந்த பணம் உங்களை தேடி வரும்.

சிம்ம ராசி

 

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் புதன் குரு சேர்க்கை நிகழ்வுற்ற காரணத்தினால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். உங்களுடைய அறிவுக் கூர்மையால் எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். வாழ்வில் நல்ல முன்னேற்றம் உங்களைத் தேடி வரும். உங்களுடைய முடிவுக்கு குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். 

வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்களால் பாராட்டுக்கள் கிடைக்கும். சக ஊழியர்கள் உங்களுக்கு சாதகமாக நடந்து கொள்வார்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel