தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Karthigai Worship: கார்த்திகை வழிபாடு பலன்கள்!

Karthigai worship: கார்த்திகை வழிபாடு பலன்கள்!

Suriyakumar Jayabalan HT Tamil
Dec 08, 2022 12:07 PM IST

கார்த்திகை மாதத்தில் செய்யப்படும் வழிபாடுகளால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இங்கே காண்போம்.

கார்த்திகை வழிபாடு
கார்த்திகை வழிபாடு

இந்த கார்த்திகை மாத வழிபாடுகள் மூலம் பல பலன்கள் கிடைப்பதாக ஆன்மீகம் கூறுகிறது. இந்நிலையில் இம்மாதத்தில் செய்யும் வழிபாடுகள் மூலம் கிடைக்கும் பலன்கள் குறித்து இங்கே காண்போம்.

கார்த்திகை மாத வழிபாடு பலன்கள்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் மகா தீபத் திருவிழா ஆண்டிற்கு ஒரு முறை கார்த்திகை மாதத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த மகா தீபத்தைக் கண்டால் நமது வாழ்வில் பிரகாசம் பொங்கும் என்பது ஐதீகமாகும்.

இந்த மாதத்தில் புண்ணிய நதியாகக் கருதப்படும் காவிரி நதியில் நீராடுவது, வெண்கல பாத்திரம், தானியம், தீபம், பழம், நீர் போன்றவற்றைத் தானமாகக் கொடுத்தால் வாழ்க்கை செல்வச் செழிப்பாக இருக்கும் அதே சமயம் செல்வம் பெருகும் என்பது ஐதீகம் ஆகும்.

கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமைகள் கார்த்திகை சோமவாரம் என அழைக்கப்படுகிறது. இந்நாளில் விரதம் இருந்தால் பாவங்கள் நீங்கும் எனக் கூறப்படுகிறது.

கார்த்திகை குறித்துக் கூறப்படும் புராணங்களைக் கேட்டால் வாழ்க்கையில் நோய், ஏழ்மை அகலும் என்பது ஐதீகம்.

இம்மாதத்தில் செய்யப்படும் தானத்தின் பலன்கள் இரட்டிப்பாகக் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

துன்பங்கள் விலக வேண்டும் என்றால் கார்த்திகை மாதத்தில் அதிகாலையிலிருந்து நீராட வேண்டும் எனக் கூறப்படுகிறது.

இம்மாதத்தில் பகவத்கீதை படித்தால் மன அமைதி உண்டாகும் என்றும், நெல்லிக்கனியைத் தானமாகக் கொடுத்தால் பதவிகளில் உயர்வு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமிக்குப் பிறகு சோமவார தினத்தில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் அனைத்து விதமான பலன்களும் கிட்டும் என்பது ஐதீகம்.

கார்த்திகை மாதத்தில் தீபத்தைக் கிழக்கு நோக்கி ஏற்றினால் துன்பங்கள் விலகும் என்றும், மேற்கு திசை நோக்கி ஏற்றினால் கடன் சிக்கல்கள் நீங்கும் என்றும் கூறப்படுகிறது.

WhatsApp channel