தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Rahu Ketu Luck: இந்த 4 ராசிகளுக்கு 18 மாதங்கள் பண மழை தான்!

Rahu Ketu Luck: இந்த 4 ராசிகளுக்கு 18 மாதங்கள் பண மழை தான்!

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 04, 2023 12:06 PM IST

ராகு கேது பெயர்ச்சியால் பலன்களை பெறப்போகும் 4 ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

ராகு கேது பெயர்ச்சி
ராகு கேது பெயர்ச்சி

ஒருவர் ராசியில் ராகு மற்றும் கேது சாதகமாக இருந்தால் அவர்களுக்கு செல்வாக்கு தேடி வரும். திடீரென அதிர்ஷ்டம் கொட்டும். ராகு பகவான் செல்வாக்கை அள்ளிக் கொடுப்பார். கேது பகவான் திடீர் ஞானத்தை கொடுத்து மோட்சத்தை கொடுப்பார். நிழல் கிரகங்களாக விளங்கக்கூடிய ராகு மற்றும் கேது எப்போதுமே நேருக்கு நேராக சந்தித்துக் கொள்வார்கள்.

மேஷ ராசி

பணம் வருமானத்தில் இந்த குறையும் இருக்காது. கடன் வசூல் ஆகும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். புதிதாக வீடு வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் மற்றும் சற்று கவனம் தேவை.

ரிஷப ராசி

லாப ஸ்தானத்தில் வரக்கூடிய ராகு பகவான் உங்களது பணத்தேவையை பூர்த்தி செய்வார். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டில் பொன் மற்றும் பொருள் சேர்க்கை அதிகமாக உள்ளது. வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.

மிதுன ராசி

உங்கள் ஆசிரியர்கள் பத்தாம் வீட்டில் வரப்போகும் ராகு பகவான் உயர் பதவிகளை தேடித் தரப் போகிறார். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். கடுமையாக உழைக்க வேண்டி வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும்.

கடக ராசி

பாக்கிய ஸ்தானத்தில் வரப்போகும் ராகு பகவான் உங்கள் தடைகளை நீக்குவார். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். உறவினர்களால் மதிப்பு அதிகரிக்கும். பூர்விக சொத்துக்கள் உங்களை தேடி வரும்.

 

(பொறுப்புத்துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பொதுவான அடிப்படையில் உள்ளன. தெளிவாக தெரிந்து கொள்ள சரியான நிபுணரை அணுகி அறிந்து கொள்ளவும்.)

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

https://twitter.com/httamilnews

 

https://www.facebook.com/HTTamilNews

 

https://www.youtube.com/@httamil

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel

டாபிக்ஸ்