தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Suriyan Money Luck: சூரியனால் பணமழை பெறும் 3 ராசிக்காரர்கள் இவர்கள்தான்!

Suriyan Money Luck: சூரியனால் பணமழை பெறும் 3 ராசிக்காரர்கள் இவர்கள்தான்!

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 14, 2023 12:15 PM IST

சூரிய பகவானால் பணயோகத்தைப் பெற போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

சூரிய பகவான்
சூரிய பகவான்

சூரிய பகவான் ஜூலை மாதம் 16ஆம் தேதி அன்று கடக ராசிக்கு உள் நுழைந்தார். தற்போது ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி வரை கடகத்தில் பயணம் செய்கிறார். இந்த பயிற்சியால் மூன்று ராசிக்காரர்கள் மிகப்பெரிய ராஜயோகத்தை பெறப்போவதாக ஜோதிடம் கூறுகிறது. இங்கே காண்போம்.

மேஷ ராசி

 

சூரிய பகவான் உங்களுக்கு நல்ல பலன்களை அள்ளித் தரப் போகிறார். வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் விரைவில் தீர்ந்து விடும். புதிய வாகனம் மற்றும் வீடு வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. பணவரவில் இந்த குறையும் இருக்காது.

ரிஷப ராசி

 

சூரிய பகவான் உங்களுக்கு பெரும் வெற்றிகளை தேடித் தரப் போகிறார். எதிர்பாராத நேரத்தில் வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைத்த அதிக வாய்ப்பு உள்ளது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து பல வேலைகள் தற்போது முடி அதிக வாய்ப்புள்ளது. கடின உழைப்பு நல்ல பலன்களை அள்ளித் தரும். பண சிக்கல்கள் தற்போது முடிவடையும்.

சிம்ம ராசி

 

சூரிய பகவானால் உங்களுக்கு அதிகப்படியான பாக்கியங்கள் உண்டாகும். தனித்துவமான தலைமைத்துவ குணத்தை உங்களுக்கு கொடுப்பார். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும். வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். வெளியூர் பயணங்கள் செல்ல அதிக வாய்ப்புள்ளது.

(பொறுப்புத்துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பொதுவான அடிப்படையில் உள்ளன. தேவையிருந்தாள் சரியான ஜோதிட நிபுணரை அணுகி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.)

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்