தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sani Sun: சூரியனும் சனியும் சேர்க்கை.. சிரமப்பட போகும் ராசிகள்

Sani Sun: சூரியனும் சனியும் சேர்க்கை.. சிரமப்பட போகும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Sep 09, 2023 09:26 AM IST

சூரியனும் சனியும் சேர உள்ளதால் கஷ்டப்பட போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

சூரியனும் சனியும் சேர்க்கை
சூரியனும் சனியும் சேர்க்கை

அப்போது ஒரு சில ராசிகளுக்கு சிரமமான சூழ்நிலை உண்டாகும். சூரிய பகவான் தனது சொந்த ராசியான சிம்ம ராசியில் சஞ்சாரம் செய்து வருகிறார். சனிபகவான் தனது சுந்தர் ஆசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் நேருக்கு நேர் சந்திக்க உள்ளனர்.

இந்த நிகழ்வு தற்செயலாக நடந்தாலும் ஒரு சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

 

சனி மற்றும் சூரிய பகவான் நேருக்கு நேர் பார்க்கின்ற காரணத்தினால் நீங்கள் சற்று கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகி உள்ளது. வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களிடம் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

சிம்ம ராசி

 

சனி மற்றும் சூரிய பகவானால் நேரடி சந்திப்பால் உங்களுக்கு சில சிரமங்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. உங்கள் குடும்ப வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கணவன் மனைவிக்கிடையே சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வியாபாரம் மற்றும் தொழிலில் புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது எச்சரிக்கையாக இருங்கள்.

கன்னி ராசி

 

நேருக்கு நேர் இரண்டு கிரகங்கள் பார்க்கின்ற காரணத்தினால் உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய கஷ்டமான மாற்றங்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற மன அழுத்தத்தை குறைத்துக் கொள்வது நல்லது. கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். மற்றவர்களிடம் பேசும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

துலாம் ராசி

 

உங்கள் வாழ்க்கையில் சனி மற்றும் சூரிய பகவான் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த போகின்றனர். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது மிகவும் அவசியமாகும். புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை உண்டாகும். தன்னம்பிக்கை குறையாமல் இருக்க வேண்டும்.

பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை அனைத்தும் பொதுவான கணிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. தேவை இருப்பின் சரியான நிபுணரை அணுகி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

WhatsApp channel

டாபிக்ஸ்