தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Chandra Yoga: சந்திரப்பெயர்ச்சியில் உருவான இந்திர யோகம் பெறும் 5 ராசிக்காரர்கள்

Chandra Yoga: சந்திரப்பெயர்ச்சியில் உருவான இந்திர யோகம் பெறும் 5 ராசிக்காரர்கள்

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 26, 2023 12:02 PM IST

சந்திர பகவானால் பலன்களைப் பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

சந்திர பகவான்
சந்திர பகவான்

சந்திர பகவான் கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி அன்று விருச்சிக ராசிக்குள் நுழைந்தார். இதன் காரணமாக சுபயோகமான இந்திர யோகம் உருவாகியுள்ளது. இந்த யோகத்தின் தாக்கம் பன்னிரண்டு ராசிகளுக்கும் இருந்தாலும், குறிப்பிட்ட ஐந்து ராசிக்காரர்கள் மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்.

ரிஷப ராசி

 

சந்திர பகவான் நாள் உங்களுக்கு இந்திர யோகம் உருவாகியுள்ளது. இந்த யோகம் உங்களுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கித் தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பண வரவு அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகும். நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். உங்களைச் சுற்றி இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும்.

மிதுன ராசி

 

இந்திரயோகத்தால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகின்றது. பணம் வரத்திற்கான வாய்ப்புகள் அனைத்தும் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு சரியான தருணத்தில் நல்ல வேலை கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

சிம்ம ராசி

 

சந்திர பகவானால் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. குடும்ப வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். பண வரத்திற்கான வாய்ப்புகள் அனைத்தும் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

மகர ராசி

 

சந்திர பகவான் வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. வெளியே பயணம் செய்ய வாய்ப்புகள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். எதிரிகளின் தொந்தரவு குறையும்.

கும்ப ராசி

 

இந்திரயோகத்தால் உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல யோகம் கிடைக்கும் என கூறப்படுகிறது. பண வரத்திற்கான வாய்ப்புகள் அனைத்தும் அதிகரிக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை அனைத்தும் பொதுவான கணிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. தேவை இருப்பின் சரியான நிபுணரை அணுகி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்