Jackpot: சூப்பராக வாழும் ராசிகள்.. சூரியன் பிரகாசம் வீசிவிட்டார்.. வந்துவிட்டது ராஜ வாழ்க்கை..-here we will see about the zodiac signs that will be made king jackpot by lord surya - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Jackpot: சூப்பராக வாழும் ராசிகள்.. சூரியன் பிரகாசம் வீசிவிட்டார்.. வந்துவிட்டது ராஜ வாழ்க்கை..

Jackpot: சூப்பராக வாழும் ராசிகள்.. சூரியன் பிரகாசம் வீசிவிட்டார்.. வந்துவிட்டது ராஜ வாழ்க்கை..

Suriyakumar Jayabalan HT Tamil
Sep 05, 2024 05:53 PM IST

Lord Surya: சூரிய பகவானின் கன்னி ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுத்துள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Jackpot: சூப்பராக வாழும் ராசிகள்.. சூரியன் பிரகாசம் வீசிவிட்டார்.. வந்துவிட்டது ராஜ வாழ்க்கை..
Jackpot: சூப்பராக வாழும் ராசிகள்.. சூரியன் பிரகாசம் வீசிவிட்டார்.. வந்துவிட்டது ராஜ வாழ்க்கை..

நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். அதிபதியாக சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சூரிய பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. சூரிய பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

தற்போது சூரிய பகவான் தனது சொந்த ராசியான சிம்ம ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற செப்டம்பர் 16ஆம் தேதி அன்று கன்னி ராசிக்கு செல்கிறார். இந்த புதன் பகவானின் சொந்தமான ராசியாகும். சூரிய பகவானின் கன்னி ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுத்துள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

சிம்ம ராசி

உங்கள் ராசிகள் இரண்டாவது வீட்டில் சூரியன் பயணம் செய்யப் போகின்றார். எதனால் உங்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். நிதி ஆதாயங்கள் உங்களுக்கு கிடைக்கக்கூடும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு உயர் அலுவலர்கள் சாதகமாக செயல்படுவார்கள். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். 

நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். வியாபாரத்தில் புதிய திட்டங்கள் உங்களுக்கானதாக மாறும் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பேச்சுத் திறமையால் காரியங்கள் வெற்றி அடையும். வணிகத்தில் சிக்கி கிடந்த பணம் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும்.

தனுசு ராசி

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சூரியன் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு செப்டம்பர் மாதம் முதல் நல்ல யோகம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நிறைய பணத்தை சேமிக்க கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். 

வியாபாரங்களில் உங்களுக்கு பல மடங்கு லாபம் கூடும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். தந்தையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். புதிய வாய்ப்புகளால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களை தேடி வரும். குடும்பத்தினரால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மிதுன ராசி

உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் சூரியன் பயணம் செய்யப் போகின்றார். அதனால் உங்களுக்கு புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். அறிவாற்றல் உங்களுக்கு அதிகரிக்கும். நல்ல முன்னேற்றம் உங்களுக்கு கிடைக்க கூடும். பெற்றோரின் முதல் ஆதரவும் உங்களுக்குத்தான் கிடைக்கும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சூரியனைப் போல் பிரகாசமான வாழ்க்கை உங்களுக்கு காத்திருக்கின்றது. செப்டம்பர் மாதம் முதல் உங்களுக்கு யோகம் உச்சத்தில் இருக்கப் போகின்றது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.