3 Lords Luck: 99 வருடங்களுக்கு பிறகு.. குரு, செவ்வாய், சூரியன் சேர்க்கை.. 3 ராசிகள்.. கோடி கோடியாய் கொட்டும்
3 Lords Luck: செவ்வாய் பகவான், குரு பகவான், சூரிய பகவான் ஆகிய மூன்று கிரகங்களும் சேர்ந்து ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
3 Lords Luck: நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். நவகிரகங்களின் இடமாற்றத்தை பொறுத்து ஒருவரின் ஜாதகம் எழுதப்படுவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
அந்த வகையில் தற்போது தனது சொந்தமான ராசியில் சூரிய பகவான் பயணம் செய்து வருகின்றார். அதே சமயம் தேவர்களின் ராஜகுருவாக திகழ்ந்துவரும் குரு பகவான் ரிஷப ராசியில் கடந்த மே மாதம் தனது பயணத்தை தொடங்கி உள்ளார். கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதியன்று நவக்கிரகங்களின் தளபதியாக விளங்கக்கூடிய செவ்வாய் பகவான் மிதுன ராசியில் தனது பயணத்தை தொடங்கினார்.
செவ்வாய், குரு, சூரியன் ஆகிய மூன்று கிரகங்களும் தற்போது சுப நிலைகளில் ஒன்றிணைந்து பயணம் செய்து வருகின்றனர். இந்த நிகழ்வு 99 வருடங்களுக்குப் பிறகு நிகழ்ந்துள்ளது. இது அனைத்து ராசிகளுக்கும் அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும். இருப்பினும் செவ்வாய் பகவான், குரு பகவான், சூரிய பகவான் ஆகிய மூன்று கிரகங்களும் சேர்ந்து ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
மேஷ ராசி
உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் சூரிய பகவானும், இரண்டாவது வீட்டில் குரு பகவானும், மூன்றாவது வீட்டில் செவ்வாய் பகவானும் பயணம் செய்து வருகின்றன. இதனால் உங்களுக்கு ஏராளமான பலன்கள் கிடைக்கும். அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். பண்களில் இருந்து விடுதலை கிடைக்கும்.
தொழிலில் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பாராட்டுக்கள் மற்றும் பதவி உயர்வுகள் கிடைக்கக்கூடும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். போட்டி தேர்வுகளில் வெற்றி காண்பார்கள். பங்குச்சந்தை முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்றுத்தரும். வணிகத்தின் நல்ல முன்னேற்றம் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
மகர ராசி
உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் சூரிய பகவானும், ஐந்தாவது வீட்டில் குரு பகவானும், ஆறாவது வீட்டில் செவ்வாய் பகவானின் பயணம் செய்து வருகின்றனர். இதனால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். ஏழரை சனியின் கடைசி கட்டம் நடந்து கொண்டிருக்கின்ற தொடர்பான நேரத்தில் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் பணம் உங்களைத் தேடி வரும். சிக்கிக் கிடந்த பணத்தால் உங்களுக்கு விடுதலை உண்டாகும். நண்பர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
துலாம் ராசி
உங்கள் ராசிகள் எட்டாவது வீட்டில் குருபகவானும், ஒன்பதாவது வீட்டில் செவ்வாய் பகவானும், பதினோராவது வீட்டில் சூரிய பகவானும் பயணம் செய்து வருகின்றனர். இதனால் உங்களுக்கு அபரிமிதமான பலன்கள் அதிகமாக கிடைக்கும். அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். இதுவரை திருமணத்தில் ஏற்பட்டிருந்த தடைகள் அனைத்தும் விலகும்.
திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். பணத்தை சேமிக்கக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். மொத்தத்தில் வாழ்க்கையில் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.