தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  ஆபத்து வருகிறது.. சூரியன் புரட்டப் போகிறார்.. சிக்கி சிதைய போகும் ராசிகள் இவர்கள்தான்

ஆபத்து வருகிறது.. சூரியன் புரட்டப் போகிறார்.. சிக்கி சிதைய போகும் ராசிகள் இவர்கள்தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 10, 2024 11:48 AM IST

சூரிய பகவானின் இடமாற்றம் மிகப்பெரிய தாக்கத்தை 12 ராசிகளுக்கும் ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு நன்மைகளும், சில ராசிகளுக்கு பல்வேறு விதமான சிக்கல்களும் ஏற்படக்கூடிய சூழ்நிலை அமையும். தற்போது சூரிய பகவானின் இடமாற்றத்தால் சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

சூரியன்
சூரியன்

நவகிரகங்களின் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். தற்போது சூரிய பகவான் மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த மாதம் தனது இடத்தை மாற்றுகின்றார். வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி அன்று சூரிய பகவான் செவ்வாய் பகவான் ராசி மேஷ ராசியில் நுழைகின்றார். ஒரு வருடத்திற்கு பிறகு இந்த சம்பவம் நிகழ்கின்றது.

சூரிய பகவானின் இடமாற்றம் மிகப்பெரிய தாக்கத்தை 12 ராசிகளுக்கும் ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு நன்மைகளும், சில ராசிகளுக்கு பல்வேறு விதமான சிக்கல்களும் ஏற்படக்கூடிய சூழ்நிலை அமையும். தற்போது சூரிய பகவானின் இடமாற்றத்தால் சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

சூரிய பகவான் உங்கள் ராசியில் முதல் வீட்டில் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு தேவையில்லாத சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மற்றவர்களோடு பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். விவாதங்கள் செய்வதை தவிர்ப்பது நல்லது யாரிடமும் கோபப்படாமல் இருந்தால் நன்மைகள் உண்டாகும். குடும்பத்தினரிடம் பேசும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருக்க வேண்டும். சக ஊழியர்களால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படும். உயர் அலுவலர்களுடன் உங்களுக்கு வாக்குவாதம் ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

மீன ராசி

 

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் சூரிய பகவான் பயணம் செய்ய உள்ளார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான மாற்றங்கள் ஏற்படும். உங்களுடைய பேச்சால் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. கோபத்தால் உறவினர்களிடம் சிக்கல்கள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உடன் வேலை செய்பவர்களோடு சில விஷயங்கள் ஏற்றத்தாழ்வுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். மிகுந்த மன உளைச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தேவையில்லாத விமர்சனங்களை நீங்கள் சந்திக்க நேரிடும்.

ரிஷப ராசி

 

உங்கள் ராசியில் 12-வது வீட்டில் சூரிய பகவான் பயணம் செய்து உள்ளார். நீங்கள் வெளிநாடு செல்லும் வாய்ப்பு சற்று தாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். மருத்துவ செலவுகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் தனி கவனம் செலுத்தி உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். பெரிய நோய்கள் உங்களைத் தேடி வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எதிரிகளால் அதிகம் சிக்கல்கள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும். கொஞ்சம் கொஞ்சமாக நீங்கள் பிரச்சனையை விட்டு விலகி வருவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

WhatsApp channel