தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Shani Transit: சனியின் அபூர்வ யோகம்.. திரிகோண ராஜயோகத்தில் குளிக்கும் 3 ராசிகள்

Shani Transit: சனியின் அபூர்வ யோகம்.. திரிகோண ராஜயோகத்தில் குளிக்கும் 3 ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 06, 2023 11:15 AM IST

சனிபகவானின் திரிகோண ராஜ யோகத்தில் வாழப்போகும் மூன்று ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

சனியின் அபூர்வ யோகம்
சனியின் அபூர்வ யோகம்

அந்த வகையில் சனிபகவான் கொடுக்கக்கூடிய இந்த ராஜ யோகத்தில் பலன்களை பெறப்போகும் மூன்று ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

கும்ப ராசி

உங்களுக்கு திரிகோண ராஜ யோகம் கிடைப்பதால் சுப நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற வாய்ப்பு உள்ளது. ஒரு செயலில் முழுமையான நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். உங்கள் வேலையில் வெற்றி கிடைக்கும். உங்கள் நேரத்தை தரமான விஷயங்களுக்கு செலவு செய்வீர்கள்.

குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். திருமணத்தில் இருந்த தடை நீங்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.

ரிஷப ராசி

சனி பகவானின் கருணையால் கடந்த கால சிக்கல்கள் விரைவாக விலகும். உங்களின் வருமானம் அதிகரிக்கும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் வளர்ச்சி அதிகமாக இருக்கும். நீங்கள் வேலை செய்யும் இடத்தில் நற்பெயர் கிடைக்கும்.

புதிய வேலை தேடி அலைபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் லாபம் அதிகரிக்கும். தேவையற்ற செலவுகள் வந்தாலும் அதற்கு ஏற்றார் போல் வருமானம் இருக்கும்.

சிம்ம ராசி

உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கப் போகின்றது. திட்டமிட்ட வழியில் செயல்படுவீர்கள். பலவித சிக்கல்களில் இருந்து விடுபடுவீர்கள். பிள்ளைகளால் உங்களுக்கு நற்செய்தி வரும். அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவையும் பெறுவீர்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ளவை அனைத்தும் பொதுவான அடிப்படையில் தரப்பட்டுள்ளன. சரியான நிபுணரை அணுகி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்)

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்