தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Bad Luck: குருபகவானால் கஷ்டப்படப் போகும் இவர்கள்தான்

Guru Bad Luck: குருபகவானால் கஷ்டப்படப் போகும் இவர்கள்தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Sep 14, 2023 10:34 AM IST

குரு பகவான் கஷ்டப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

குரு பகவான்
குரு பகவான்

ஒரு சில கிரகத்தின் இடமாற்றமானது மிகவும் பெரிதாக பார்க்கப்படுகிறது. இடமாற்றத்தின் போது சில ராசிகளுக்கு, அசுப பலன்களும் சில ராசிகளுக்கு சுப பலன்களும் கிடைக்கும். ராகு கேது, சனி, சூரியன், சுக்கிரன், குருபகவான் செவ்வாய் உள்ளிட்ட கிரகங்களின் இடப்பெயர்ச்சியானது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

குரு பகவான் செப்டம்பர் 4 ஆம் தேதி அன்று மேஷ ராசியில் வக்ர பெயர்ச்சி அடைந்தார். இதனால் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் சிரமங்களை சந்திக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

குரு பகவானால் உங்களுக்கு சில சிக்கல்கள் ஏற்பட உள்ளது. முடிவெடுப்பதில் சிரமம் ஏற்படும். மற்றவர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

ரிஷப ராசி

 

குரு பகவானால் சில சங்கடங்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. பெண்கள் உடல்நலத்தில் கவனமாக இருப்பது நல்லது. பல ஆலோசனைகளுக்கு பிறகு முடிவு எடுத்தால் சிறப்பாக இருக்கும். புதிய முதலீடுகளை தவிர்க்க வேண்டும்.பெற்றோர்களுக்கு மன வருத்தம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

சிம்ம ராசி

 

நீங்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். கருத்து வேறுபாடுகளை கண்டு கொள்ளாமல் செல்வது நல்லது. தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. நெடுந்தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. பேசும்போது எச்சரிக்கையாக இருங்கள்.

கடக ராசி

 

குருபகவானால் சிரமங்களை சந்திக்க போகின்றீர்கள். புதிய வாய்ப்புகள் உங்கள் கைநழுவி போகும். வேலையை திட்டமிட்டு செய்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். எச்சரிக்கையாக இருங்கள். எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

 

பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை அனைத்தும் பொதுவான கணிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. தேவை இருப்பின் சரியான நிபுணரை அணுகி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்