தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Bad Luck: குருவினால் கஷ்டப்பட போகும் ராசிகள் இவர்கள்தான்

Guru Bad Luck: குருவினால் கஷ்டப்பட போகும் ராசிகள் இவர்கள்தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Sep 01, 2023 11:57 AM IST

குருவிடம் மோசமான பலன்களை பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

குருபகவான்
குருபகவான்

தனுசு மற்றும் மீன ராசியின் அதிபதியாக விளங்கக்கூடிய குருபகவான் 12 ஆண்டுகளுக்கு பிறகு மேஷ ராசியில் புகுந்துள்ளார். வரும் செப்டம்பர் 4 ஆம் தேதி அன்று குரு பகவான் வக்ரமாக உள்ளார். இதன் மூலம் சில ராசிகள் கெடு பலன்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே காண்போம்.

மேஷ ராசி

குருபகவான் வக்ரமாகின்ற காரணத்தினால் இந்த காலத்தில் உங்களுக்கு சில சிரமங்கள் ஏற்பட உள்ளது. எந்த ஒரு முடிவையும் எடுக்கும்போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பெற்றோரிடத்தில் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

ரிஷப ராசி

 

குரு பகவானால் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது எனவே எச்சரிக்கையாக இருங்கள். குடும்ப வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. உடன் பிறந்தவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டால் அமைதியாக செல்வது உறவை வலுப்படுத்தும்.

கடக ராசி

 

குருபகவானால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எதிரிகள் உங்களது வீழ்ச்சிக்காக காத்திருக்கிறார்கள் எச்சரிக்கையாக இருங்கள். மற்றவர்களிடத்தில் பேசும்போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வேலை செய்யும் இடத்தில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

சிம்ம ராசி

 

குரு பகவானால் உங்களுக்கு பொறுப்புச் சுமைகள் அதிகரிக்க போகின்றன. உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. இல்லற வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. வார்த்தைகளின் கவனமாக இருக்க வேண்டும். பண சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. மற்றவர்களிடத்தில் பேசும்போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

தனுசு ராசி

 

உங்கள் ராசியில் நான்காம் வீட்டில் அதிபதியாக குருபகவான் விளங்குகிறார். உடல் சார்ந்த பிரச்னைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. பெற்றோரின் உடல்நலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சிறிய தவறுகள் கூட பெரிய சிக்கலாக மாறலாம் நினைவு எச்சரிக்கையாக இருங்கள். வெளியே செல்லும்போது கவனமாக இருப்பது நல்லது.

பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை அனைத்தும் பொதுவான கணிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. தேவை இருப்பின் சரியான நிபுணரை அணுகி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்